தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்களுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு அந்த வகையில் நடிகர் பொன் வண்ணனும் ஒரு சிறந்த குணசித்திர நடிகராக அறியப்பட்டவர். 80 காலகட்டங்களளில் பல்வேறு திரைப்படங்களில் நடிகர் பொன்வண்ணன் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். மதுரை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர் பிறந்தது என்னவோ ஈரோடு மாவட்டத்தில் தான். இளம் வயதிலேயே சினிமா மீது இருந்த ஆசியால் சென்னைக்கு வந்த இவர் பாரதி ராஜாவிடம் துணை இயக்குனராக பணியாற்றினார்.

இதனை தொடர்ந்து பாரதிராஜா புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலம் இவரை ஒரு நடிகராக அறிமுகம் செய்து வைத்தார் பாரதி ராஜா. இதனைத் தொடர்ந்து கருத்தம்மா, பசும்பொன் போன்ற பல்வேறு படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். பாரதிராஜாவிடம் துணை இயக்குனராக இருந்தபோது இவர் அன்னை வயல் என்ற படத்தை மிகவும் சிறிய பட்ஜெட்டில் எடுத்திருந்தார்.

Advertisement

ஆனால் இந்த திரைப்படம் பெரிதும் கவனிக்கப்படவில்லை இதனை தொடர்ந்து மீண்டும் நடிகராக தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். இதை தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு ஜமீலா என்ற திரைப்படத்தை எடுத்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய அளவிலான விருதும் கிடைத்தது. இந்த திரைப்படம் 35 லட்ச ரூபாய் செலவில் 17 நாட்களில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக 2005 ஆம் ஆண்டு கோமதி நாயகன் என்ற படத்தை இயக்கி இருண்டஹார்.

இதனிடையே இவர் தன்னுடன் நடித்த சரண்யாவை 1995ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனால், பல பேருக்கு நடிகை சரண்யாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது என்பது தெரியாது. பொன்வண்ணன் கருத்தம்மா திரைப்படத்தில் தான் சரண்யாவை முதன்முதலாக சந்தித்திருந்தார். அந்த படத்தில் இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக தான் நடித்து இருந்தார்கள்.

Advertisement

இந்நிலையில் நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், பொன்வண்ணன் அவர்கள் எனக்கு போன் செய்து உங்களுடைய கால்ஷீட் வேண்டும் என்று கேட்டார். நானும் எத்தனை நாட்கள் என்று கேட்டேன். அவர் 70 வருடத்திற்கு என்று கூறினார். உடனே எனக்கு ஷாக்காக இருந்தது.அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டேன். பின்பு அவர் நான் உங்களை காதலிக்கிறேன் என்று நினைத்து கொள்ள வேண்டாம்.

Advertisement

உங்களுடன் வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் கேட்டேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்கள். இல்லை என்றால் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொன்னார். நான் அவரிடம் யோசிக்கணும் என்று சொன்னேன். அதற்கு அவர் நன்றாக யோசித்து சொல்லுங்கள் என்று சொன்னார். அதற்கு பிறகு நான் என்னுடைய தந்தையிடம் அவர் சும்மாக விளையாடுகிறார். செட்டில் அவர் சிரித்தது கூட கிடையாது. அவர் ஏன் இப்படி பேசினார்? என தெரியவில்லை என்று கூறினேன். அதற்கு பிறகு எங்களுடைய திருமணம் நடந்தது என்று கூறியிருந்தார்..

Advertisement