நடிகர் சங்க பிரச்சனை ! விஷாலால் பதவியை ராஜினாமா செய்த நடிகர் !

0
1157

போகிற போக்கை பார்த்தால் விஷால் இடத்திற்கு மொத்தமாக வேட்டு வைத்துவிடுவார்கள் போலும். எந்த ஒரு கொள்கை கூறி அதை நடிகர் சங்க அரசியலில் புகுத்தி இரண்டு சங்களுக்கு தலைவர் ஆனாரோ, அதே கொள்கை அவரை தற்போது திருப்பி அடித்து காவு வாங்க துவங்கியுள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில், முன்னர் தலைவராக இருந்த சரத்குமார் அரசியல் பின்புலம் சார்ந்தவர் அதனால் அவர் தலைவராக இருக்க கூடாது என நடிகர் சங்கத்தில் இருந்து 3000+ உறுப்பினர்களிடம் பிரசசாரம் செய்து கிட்டத்தட்ட ஜஸ்ட் மிஸ்சில் ஓட்டுக்களை பெற்று நடிகர் சங்கத்தில் நாசரை தலைவராக ஆக்கினார் விஷால் கிருஷ்ணா ரெட்டி.

அந்த சங்கத்திற்கு துணைத்தலைவராக நியமிக்கப்பட்டது நடிகர் பொன்வண்ணன். ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கிய விஷாலை, வேட்புமனுவை ஒழுங்காக தாக்கல் செய் என சொல்லாத குறையாக கூறி அவரை நிராகரித்துவிட்டது தேர்தல் ஆணையம்.
இதனால், ஒரு திரைக்கலைஞர் சங்கத்தில் இருப்பவர் ஆளும்கட்சியை எதிர்த்து தேர்தலில் நின்றால் சினிமாவிற்கு தான் மறைமுக பிரச்சனை வரும் எனக் கூறி அவரை, அவரது பதவிகளை ராஜினாமா செய்யக்கூறினார் சேரன் அண்ட் கோ.

இந்த நிலையில், விஷாலின் கூட்டணியில் இருக்கும் ஒரு துணைத்தலைவர் பொன்வண்ணன் ராஜினாமா செய்திருகிறார். இது விஷால் கூட்டணிக்கு பெருத்த அடியாக விழுந்துள்ளது.மேலும், பாஜக’வை சேர்ந்த நடிகர் எஸ்.வி சேகர் ஒரு செய்தியை கூறியுள்ளார்,
பொன்னவண்ணன் இந்த முடிவை 5ஆம் தேதியை எடுத்துவிட்டதாகவும், சமாதானம் பேசியும் தனது முடிவில் நிலையாக இருந்த பொன்வண்ணன் ராஜினாமா செய்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார். அதே, போல நடிகர் சங்க தலைவர் நாசரும் கூடிய விரைவில் ராஜினாமா செய்வார் எனவும் கூறியுள்ளார் எஸ்.வி சேகர்.