மற்ற நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு உடல் எடை குறைத்து மாறிப் போன பிரசாந்த்.

0
91438
- Advertisement -

ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் ஆண் அழகன் என்ற பட்டத்தைப் பெற்றவர் நடிகர் பிரசாந்த். நடிகர் பிரசாந்த் நடிப்பில் வந்த படங்கள் எல்லாம் வணிகரீதியாக வெற்றி அடைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்து வெற்றிப்படம் என்று பார்த்தால் அது வின்னர் தான். அதற்குப் பிறகு இவருடைய நடிப்பில் வந்த பல படங்கள் தோல்வி அடைந்துள்ளது. படிப்படியாக இவருடைய மார்க்கெட்டும் சினிமாவில் குறைய தொடங்கியதால் இடம் தெரியாமல் காணாமல் போனர் நடிகர் பிரசாந்த். கதைகள் சரியாக இல்லாமல், உடல் பருமன் அதிகரித்து ரசிகர்களால் ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது அளவுக்கு பிரசாந்த் மாறினார். இடையில் அப்பப்போ தெலுங்கு சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகர் பிரசாந்த் இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்தாதுன் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் கடந்த ஆண்டு பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படம் ‘அந்தாதுன்’. இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கினார். பிளாக் காமெடி கிரைம் த்ரில்லர் படம். இந்த படத்தில் ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். ‘தி பியானோ டியூனர்’ என்ற பிரெஞ்சு படத்தின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட இந்த படத்தின் சார்பாக சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதை என மூன்று தேசிய விருதுகளையும் வென்றது. பிரம்மாண்ட அளவில் வெற்றி அடைந்த இந்தப் படத்தை இதர மொழிகள் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டி வருக்கின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்து உள்ளார்கள். அந்தாதுன்’ படம் கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிகிறார். மேலும், இந்த படத்தின் தமிழ் உரிமையை அவரது தந்தை தியாகராஜன் பெற்று உள்ளார். இந்த படத்தை தனி ஒருவன் படத்தை இயக்கிய மோகன் ராஜா இயக்க உள்ளார். இவர் பிற மொழி படங்களை தமிழில் ரீமேக் செய்வதில் கைதேர்ந்தவர். அவ்வாறு இவர் ரீமேக் செய்து இயக்கிய பல படங்கள் வெற்றி பெற்று உள்ளன. மேலும், இந்த படத்தின் இயக்குநர், இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அனைத்தும் முடிவானவுடன் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது இந்த படத்திற்காக நடிகர் பிரசாந்த் அவர்கள் 20 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். தற்போது பிரசாந்த் உடல் எடை குறைத்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது. இதனை பார்த்த ரசிகர் அனைவரும் பிரசாந்த்தா?? இது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார் என்று கூறி வருகிறார்கள். தற்போது அவர் உடல் எடையை குறைத்து உள்ள புகைப்படம் காட்டு தீ போல பரவி வருகிறது. பிரசாந்த் சினிமாவில் நுழைந்த போது எப்படி இருந்தாரோ அதேபோல் பிரசாந்த் காட்சி அளித்து வருகிறார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இனி பிரசாந்த் ஒரு கலக்கு கலக்க போகிறார் என்றும் கூறிவருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement