ராதாரவியை இப்படி படு ஸ்டைலஸ் லுக்கில் மாற்றி இருக்கும் அவரின் சொந்த பேத்தி. அவர் யார் தெரியுமா ?

0
220
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் ராதாரவி. இவர் பெரும்பாலும் படங்களில் வில்லன், குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவரது தந்தை பழம் பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகனாவார். அதே போல இவரின் சகோதரிதான் ராதிகா. இவரும் சினிமா துறையில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். அதேபோல் இவர் அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

-விளம்பரம்-

நடக்க வாழ்கை :

பல திரைப்படங்களில் வில்லன் காதாபாத்திரத்தில் நடித்த இவர் தன்னுடைய திரையுலக வாழ்ககையை நாடகம் போடுவதில் இருந்து தொடங்கினார். தன்னுடைய 9ஆம் வகுப்பில் கல்லூரி நம்பர்களுடம் இணைந்து நாடகங்களில் நடிக்க தொடங்கினார். இவரது அப்பா எம்.ஆர்.ராதா அப்போது நாடகம் மற்றும் சினிமாவில் பிரபலமானவர் என்பதினால் வி.கே ராமசாமி, எம்.ஆர்.ஆர் போன்ற நடிகர்களுடன் இணைந்து நாடகங்களில் நடித்து வந்தார்.

- Advertisement -

சினிமா அறிமுகம் :

பின்னர் தனக்கென்றும் ஒரு நாடக குழுவை தொடங்கி “ரகசிய ராத்திரி” என்ற கன்னட திரைப்படத்தின் மூலமும் சினிமாவில் அறிமுகமாக்கினார். அதன் பின்னர் இயக்குனர் பாலச்சந்திரன் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்த “மன்மதலீலை” என்கின்றன படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். பின்னர் டீ ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த உயிருள்ளவரை உஷா என்கின்ற படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார்.

படங்கள் :

அதற்க்கு பிறகு ரஜினி, கமல், சிவாஜி போன்றவர்களுடன் இணைந்து, சின்ன தம்பி, பூவெளி, குரு சிஷ்யன், உழைப்பாளி என பல திரைப்படங்களில் ஒரு வில்லனாக சிறந்து விளங்கி 40 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். இவர் சமீப காலங்களில் சின்னத்திரை நிகழ்ச்சிகள், சீரியல்கள், மேடை பேச்சுக்கள் என இருந்த இவர் அரசியல்வாதியாகவும் பாஜகவில் இணைந்து பணியாற்றி வருகிறார். 2002 ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரையில் தென்னிந்திய சினிமாவின் நடிகர் சங்க தலைவராக இருந்து வந்தார்.

-விளம்பரம்-

அரசியல் வாதி :

தற்போது இவர் பாஜக அரசியல் கட்சி கூட்டங்கள், திரைப்பட வெளியிட்டு விழாக்கள், யூடியூப் சேனல்கள் என பலவற்றில் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அதோடடு சில குணச்சித்திர வேடங்களில் நடித்தும் வருகிறார். மேலும் அப்படி பதிவிடுவதினால் சில சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்த நிலையில் தான் சமீபத்தில் போட்டோ சூட் ஒன்றில் கலந்து கொண்ட இவரின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் புகைப்படங்கள் :

இதனை பற்றி விசாரிக்கையில் 70 வயதாகும் ராதா ரவியின் பேத்தி பவித்ரா சதீஸ் சினிமா துறையில் முன்னணி நடிகை மற்றும் நடிகர்களுக்கு உடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்ததினால் தன்னுடைய தாத்தாவை லேட்டஸ்ட் உடையில் பார்க்க ஆசைப்பட்டதினால் ராதா ரவி இந்த உடையில் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகவே சினிமாவில் மீண்டும் வில்லன் காதாபாத்திரத்தில் கலக்க வந்துவிட்டார் ராதா ரவி என்று நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறன்றனர்.

Advertisement