அவர் எம்.ஜி.ஆர் மாதிரி வருவாரு.! தமிழ்நாட்டையும் விஜய் ஆள்வார்.! புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்

0
346

நடிகர் விஜய், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் “”சர்கார்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு அரசியல் கதைக்களம் கொண்ட படமாக இருக்கும் என்று ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ள வண்ணம் இருக்கிறது. மேலும், இந்த படத்தில் வில்லன் நடிகர் ராதாரவி ஒரு முக்கிய அரசியில்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Vijay With Radha Ravi

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அதற்கு ஏற்றார் போல சமீபகாலமாக வெளியான விஜய் படங்களில் சில அரசியல் சம்மந்தாபட்ட காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்று வருகிறது. இதனால் அவர் விரைவில் அரசியலுக்கு வந்துவிடுவார் என்று அவரது ரசிகர்கள் நம்பி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ராதாரவி விஜய்யின் குணம் குறித்தும் அவரது அரசியல் பிரவேசம் குறித்தும் வெளிப்படையான கருத்தை கூறியுள்ளார். சமீயத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராதாரவி இதுகுறித்து தெரிவிக்கையில் ‘நடிகர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் நடிப்பு என்று வந்துவிட்டால் அவர், சிவாஜி கணேசனை போல மாறி விடுகிறார். அவருடைய குணத்தில் நான் எம் ஜி ஆர் அவர்களின் சில குணங்களை கண்டுள்ளேன். அவரிடன் தலைமையேற்று நடத்தும் குணம் அதிகமாகவே உள்ளது.

radha

மற்றவர்களை போல ஜெயலலிதா இல்லாத போது மட்டும் நடிகர் விஜய் குரல் கொடுக்கவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்த போதே பல விடயங்களை செய்தவர் அவர்.மேலும், பல ஏழை மக்களுக்கு பல உதவிகளையும் அவர் செய்திருக்கிறார். இதனால் பல அரசியல் எதிருப்புகளையும் அவர் சம்பாதித்தார். தற்போது தமிழ் சினிமாவை அவர் ஆள்வது போல தமிழ் நாட்டையும் ஆளுவார்” என்று தெரிவித்துள்ளார்