மயிருக்கு இருக்க மரியாதை நடிகனுக்கு இல்லை – விருது வாங்கி சென்ற யோகி பாபு குறித்து பேசிய பிரபல நடிகர்.

0
20932
yogi
- Advertisement -

சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து சினிமாவில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் யோகி பாபுவிற்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு.

-விளம்பரம்-
Picture 1482327 | Yogi Babu - 10th Annual Edison Awards Function in  Malaysia Grandeur Photos

2009-ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் ‘யோகி’. பிரபல இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை சுப்ரமண்யம் சிவா இயக்கியிருந்தார். இதில் யோகி பாபு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இது தான் அவர் அறிமுகமான முதல் படமாம்.இதனைத் தொடர்ந்து ‘சிரித்தால் ரசிப்பேன், தில்லாலங்கடி, வேலாயுதம், தூங்கா நகரம், ராஜபாட்டை, கலகலப்பு, அட்டகத்தி, பட்டத்து யானை, சூது கவ்வும், வீரம்’ போன்ற படங்களில் சிறிய வேடங்களில் யோகி பாபு நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : அந்த நாய்ங்கள பத்தி கவலை படாதீங்க சார் – பென்னிக்கு ஆறுதல் சொன்ன சூப்பர் சிங்கர் போட்டியாளர்

- Advertisement -

தற்போது இவர் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். யோகி பாபு என்று சொன்னதும் முதலில் நினைவிற்கு வருவது அவரது ஹேர் ஸ்டைல் தான். இவரது முடியால் தான் இவருக்கு பல படங்களின் வாய்ப்பு வந்தது என்று அவரே சொல்லியுள்ளார். இப்படி ஒரு நிலையில் இவரது முடியை கடுமையாக சுட்டி காட்டியுள்ளார் பிரபல நடிகர் ராதாரவி.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘கோமாளி’ படத்திற்காக யோகி பாபுவிற்கு சிறந்த காமெடியின் விருது வழங்கப்பட்டு இருந்தது. யோகி பாபு விருது வாங்கிய பின்னர் மற்றொரு விருதை கொடுக்க ராதாரவி மேடை ஏறிய போது, இப்போ கூட ஒரு தம்பி வந்துச்சி, அவர் முடிய வளத்து இருக்கிறார். மயிருக்கு இருக்குற மரியாதை நடிகருக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement