இதே சூர்யா சிங்கம் படங்கள்ல என்ன பண்ணார் – ப்ளூ சட்டை மாறன் பட விழாவில் பேசிய ராதாரவி. வைரல் வீடியோ.

0
461
radharavi
- Advertisement -

ஆன்ட்டி இந்தியன் பட இசை வெளியீட்டு விழாவில் ஜெய்பீம் படத்தை கிண்டல் செய்த ராதாரவியின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் மூன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ஆன்டி இந்தியன். இந்த படம் கூடிய விரைவில் திரையரங்களில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் ப்ளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, நடிகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த நிகழ்வில் நடிகர் ராதாரவி அவர்கள் பேசியது, இந்த படத்தின் கதையை கேட்க நான் மாறனை கிட்டத்தட்ட மூன்று முறை திரும்ப திரும்ப வர வைத்தேன். படத்தில் நான் முதலமைச்சராக நடித்திருக்கிறேன். அதனால் ஆரம்பத்தில் இந்த படத்தில் நடிக்கலாமா? ஏதாவது சிக்கல் வருமா? என்று யோசித்தேன். ஏன்னா, இரண்டு வருஷத்துக்கு முன்னாடியே எழுதப்பட்ட கதை. அப்ப யார் முதலமைச்சராக இருந்தார் என்பது உங்களுக்கு தெரியும். மேலும், படம் பார்க்கும் போது யாரை பிரதிபலித்து இருக்கு என்றும் தெரியும்.

- Advertisement -

அதோடு இந்த நேரத்தில் இந்த படம் வெளியாகும்போது என்ன விதமாக நினைத்துக் கொள்வார்கள்? என்று எனக்கு தெரியவில்லை. இந்த படம் வெளியாவதற்கு நிறைய எதிர்ப்பு இருக்கும் என்று சொல்கிறார்கள். அது உண்மை தான். ஏனென்றால் மாறன் எல்லாருடைய படத்தையும் கழுவி ஊத்தி இருக்கிறார். அதனால் இவர் படத்தைப் பற்றி கழுவி ஊத்த நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் படம் வெளியாகும் போது மாறனுக்கு பாராட்டு கிடைக்கும். விஜய் படத்தில் மெடிக்கல் காலேஜ் மோசடி பற்றி சொல்லி இருந்தார்கள்.

Image

ஆனால், அவ்வளவு பெரிய ஹீரோ சொல்லிட்டாரு என்று யாரும் திருந்தவில்லை. உடனே அதுக்கு பின்னாடி இதே மாதிரி ரெண்டு காலேஜ் திறந்திருக்கிறார்கள். நிச்சயம் இந்த படம் வெளியானதும் விவாத மேடை நடப்பதற்கு தயாராக ஒரு கூட்டம் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த காலத்தில் கான்ட்ரவர்ஸியா படம் எடுத்தால் நிச்சயம் ஓடும். அதிலும் படங்களில் பொய் பெயர்களை சூட்டி உண்மை கதை என்று படமெடுக்கிறார்கள். அது எல்லாம் நல்லாதான் ஓடுது என்று கூறியிருக்கிறார். இப்படி ராதாரவி சூர்யாவின் ஜெய்பீம் படத்தை பற்றி மறைமுகமாக கிண்டல் செய்து பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் ஜெய்பீம். இந்தப்படம் பழங்குடியின மக்களின் வாழ்க்கையும், உண்மையில் நடந்த சம்பவத்தை மையமாகக் கொண்ட கதை. இந்த படம் பலதரப்பட்ட மக்களின் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் ஒரு சில சமூகத்தினர் மத்தியில் எதிர்ப்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் ராதாரவி ஜெய் பீம் படத்தை குறித்து ஆண்டி இந்தியன் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கிண்டல் செய்து பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement