ரஜினிக்கு இந்த விடயத்தில் துணை நிற்க மாட்டேன்..!நடிகர் லாரன்ஸ் திடீர் ஷாக்..!

0
572
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 12) தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு வெளியான ‘பேட்ட’ படத்தின் டீஸர் ரசிகர்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

-விளம்பரம்-

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் மனைவி லதா, சென்னையில் குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளையின், மொபைல் போன் செயலியை வெளியிடுகிறார்.மேலும், பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

 இந்நிலையில், ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் ரஜினி காந்துக்கு பிரார்த்தனை மேற்கொள்வதற்காக திருவான்மியூரிலுள்ள மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சென்றார். சுவாமி தரிசனம் செய்தவுடன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், ரஜினி காந்தின் பலகோடி ரசிகர்களில் தானும் ஒருவன். அவரின் அரசியல் பயணத்திற்கு துணை நிற்பேன் என்று நான் எப்போதும் கூறியதில்லை.  நான் அரசியலுக்குள் வருவது எனது தாயாருக்கு பிடிக்காது. அதனால் அவர் எந்த இடத்திற்கு சென்றாலும் வெற்றிபெற வேண்டும் என்று வேண்டிக்கொள்வேன். எனக்கும் அரசியலுக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். 

-விளம்பரம்-
Advertisement