1999ஆம் ஆண்டு வெளிவந்த சங்கமம் படத்தில் ஹீரோவாக நடித்திருப்பார் ரகுமான். அந்த படத்தில் ‘மழைத்துளி மழைத்துளி மழை சங்கமம்’ ஏமாற பாடலின் மூலம் தமிழில் பிற்பலமான ரகுமான் யார் தெரியுமா? அவருடைய குடும்பம் பற்றி தெரியுமா?

Advertisement

ரகுமானின் முழுப்பெயர் ரஷின் ரகுமான். இவர் 1967ஆம் ஆண்டு துபாயில் பிறந்தவர். ஆனால் இவருடைய மூதாதையர் குடும்பம் கேரளாவின் மலப்புரத்தை சேர்ந்தவர்கள்.

இவர் 1984ஆம் ஆண்டு ‘கூடவிடே’ என்கிற மலையாள படதின் மூலம் அறிமுகம் ஆனார். அந்த படத்தில் நடித்தற்காக கேரள அரசின் சிறந்த நடிகர் விருதினை பெற்றார் ரகுமான். அதன்பின்னர் 1984ஆம் ஆண்டு மட்டும் மொத்தம் 16 மலையாள படங்களில் நடித்து அசத்தினார். அதன் பின்னர் தமிழ், தெழுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

Advertisement

Advertisement

தமிழில் நிலவே மலரே, புரியாத புதிர், புதுப்புது அர்த்தங்கள், புதிய ராகம், சங்கமம்ம் வாமனன், பில்லா-2, துருவங்கள் பதினாறு என அன்றிலிருந்து இன்றுவரை பல ஹிட் பட்ங்களில் நடித்தார் ரகுமான்.

இவருக்கு மெகருநிஷா என்ற மனைவி உள்ளார். இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானுவின் தங்கை தான் இந்த மெகருநிஷா. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

முதல் மகள் ருஷ்டா தற்போது சென்னையில் MBA படித்து வருகிறார். இரண்டாவது மகள் அலீஷா தற்போது 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். முதல் மகள் ருஷ்டா துல்கர் சல்மானின் மிகப்பெரிய ரசிகை ஆவார். கூடிய சீக்கிரம் அவருடன் ஜோடியாக ஒரு படம் நடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார் ருஷ்டா.

Advertisement