ரகுமான் மகளின் திருமணம் – நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்.

0
1013
rahman
- Advertisement -

பிரபல தென்னிந்திய நடிகர் ரஹ்மான் வீட்டின் இல்லத் திருமண விழாவிற்கு நேரில் சென்று வாழ்த்தி இருக்கிறார் தமிழக முதலைச்சர் மு க ஸ்டாலின். தமிழ் சினிமாவில் ஒருசில 90ஸ் நடிகர்களை தற்போதும் ரசிகர்கள் மறவாமல் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ரகுமானும் ஒருவர் 1986 ஆம் ஆண்டு விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய நிலவே மலரே என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரகுமான்.

-விளம்பரம்-

ஆனால், தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தார். மேலும் இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தான். நடிகர் ரகுமானின் திருமண கதை சற்று சுவாரசியமானது. நடிகர் ரகுமானுக்கு ருஷ்தா, அலிஷா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் மேலும் இவரது மனைவியின் பெயர் மெஹர். நடிகர் ரஹ்மான் முதன் முதலில் மெஹரை ஒரு ஹோட்டலில் தான் சந்தித்துள்ளாராம்.

இதையும் பாருங்க : ப்ளூ சட்டையின் ‘ஆன்டி இந்தியன்’ இந்த படத்தின் காப்பியா ? வைரலாகும் அந்த படத்தின் வீடியோ. (நீங்களே ஒரு முடிவ சொல்லுங்க)

- Advertisement -

கடந்த 1992-ம் ஆண்டு ரஹ்மான் தனது நண்பர் ஈஷா என்பவருடன் சென்னையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார் அங்கே ஒரு குடும்பத்தை பார்த்திருகிறார் மூன்று மகள்கள் அந்த குடும்பத்தில் இருக்கையில் ரஹ்மானின் பார்வை மெஹர் மீது விழுந்துள்ளது. உடனே தனது நண்பர் ஈஷாவிடம் அந்தப் பெண்ணை நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Gallery

எதிர்பாராதவிதமாக அந்த குடும்பத்தை ரஹ்மானின் நண்பரான ஈஷாவிற்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது. பின்னர் இவர்கள் திருமணம் 1993 ஆம் ஆண்டு நடைபெற்றது. இசையமைப்பாளர் A.R.ரஹமானின் மனைவி சாய்ரா பானுவின் சகோதரி தான் நடிகர் ரகுமானின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இவரின் மூத்த மகளான ருஸ்தாவுக்கும், அல்தாஃப் நவாப் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.இதில் தமிழக முதலவர் M.K.ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

-விளம்பரம்-
Advertisement