சமீபத்தில் தூத்துக்குடியில் 13 பொது மக்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ரஜினி தூத்துக்குடி பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி சென்றுள்ளார்.

Advertisement

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்தவர்களை பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த நிலையில் படுகாயமடைந்தவர்களைச் சந்திப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று (மே30 ) தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.10, 000-ம் நிதி உதவி வழங்குவதாக ரஜினி அறிவித்தார். பின்னர், ஒவ்வொருவராகச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது மருத்துவ மனையில் போராட்டத்தில் காயமடைந்த அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் என்பவரை ரஜினி சந்தித்த போது யார் நீங்க?” என்று அந்த வீடியோவில் கேட்கிறார். அதற்கு ரஜினியோ “நான் ரஜினிகாந்த்” என்று சொல்கிறார். “ரஜினிகாந்த் என்பது தெரிகிறது, எங்கேயிருந்து வருகிறீர்கள்?” என அந்த இளைஞர் மீண்டும் கேட்கிறார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த், “நான் சென்னையிலிருந்து வருகிறேன்” என்று சொன்னதும், “சென்னையிலிருந்து வருவதற்கு நூறு நாள் ஆகுமா? என்று கேட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இது குறித்து சந்தோஷ் கூறுகையில் தூத்துக்குடியில் நாங்கள் நூறு நாள்களாகப் போராடினோம். அப்போதெல்லாம் நடிகர் ரஜினிகாந்த் எங்களைச் சந்திக்கவோ, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவோ வரவில்லை. இந்த போரத்தில்13 பேர் உயிரிழந்த போதும் அவர் வரவில்லை. ஆனால் இன்னும், சில தினங்களில் `காலா’ படம் ரிலீஸ் ஆகவிருக்கிறது. அதனால் தான் எங்களை சந்திக்க வந்துள்ளார் என்று எனக்கு தெரியும் அதனால் எனக்கு கோபம் வந்து விட்டது என்று கூறியுள்ளார்.

Advertisement