1955 To 1966 வரை – தன் 1ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள் பெயர்களோடு ராஜ்கிரண் போட்ட உருக்கமான பதிவு.

0
364
rajkiran
- Advertisement -

தன்னுடைய அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி கூறி ராஜ்கிரன் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் “நல்லி எலும்பு” என்று சொன்னால் அனைவருக்கும் நியாபகத்தில் வருவது நடிகர் ராஜ்கிரண். அதோடு ராஜ்கிரண் பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இவர் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரையில் பிறந்தவர். இவர் சினிமா திரையுலகில் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். இவருடைய உண்மையான பெயர் காதர் மொய்தீன்.

-விளம்பரம்-

திரை உலகிற்கு இவர் ராஜ்கிரண் என்ற பெயரை மாற்றி கொண்டார். இவர் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த “என்ன பெத்த ராசாவே” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் அரண்மனைக்கிளி, என் ராசாவின் மனசிலே, கொம்பன், வேங்கை, சண்டக்கோழி என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை சினிமா திரை உலகில் 30 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். மேலும், இவரே சில படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார். இவர் சினிமா திரையுலகில் கதாநாயகனாக மட்டும்தான் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

ராஜ்கிரண் திரைப்பயணம்:

நடிப்புக்கு கூட கெட்டவனாக நடிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று கூறும் உன்னதமான மனிதர். பெரும்பாலும் இவருடைய படங்கள் எல்லாம் கிராமப்புற கதைகளை மையமாகவும், காதல் காவியங்களை கொண்ட கதையாகவும் இருக்கும். தற்போது ராஜ்கிரண் அவர்கள் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் கார்த்தி, அதிதி, பிரகாஷ்ராஜ், சூரி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ராஜ்கிரண் நடிக்கும் படங்கள்:

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை அடுத்து நடிகர் ராஜ்கிரண் அவர்கள் லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்து வரும் பெயரிடாத படத்தில் நடித்து இருக்கிறார். பின் இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கிய என் ராசாவின் மனசிலே படத்தின் இரண்டாம் பக்கத்தில் ராஜ்கிரண் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் தன்னுடைய அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி கூறி ராஜ்கிரண் பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

ராஜ்கிரண் பதிவிட்ட பதிவு:

அதாவது, இன்று ஆசிரியர் தினம். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ராஜ்கிரன் அவர்கள் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், ஆசிரியர் தின நன்னாளில் எனக்கு கல்விப்பிச்சை அளித்த ஆசிரியப்பெருந்தகையினர் அனைவரையும் நினைத்து மகிழ்கிறேன். 1955 முதல் 1966 வரையிலான காலகட்டம். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா ஆரம்பப்பள்ளியின் முதல் வகுப்பு ஆசிரியர் மோஸஸ் ஐயா அவர்களுக்கும், இரண்டாம் வகுப்பு ஆசிரியர் குமார் ஐயா அவர்களுக்கும், மூன்றாம் வகுப்பு ஆசிரியை ஆசீர்வாதம் அம்மா அவர்களுக்கும், நான்காம் வகுப்பு ஆசிரியை செல்லம் அம்மா அவர்களுக்கும், ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் மாதவன் ஐயா அவர்களுக்கும் நன்றி.

ஆசிரியர்களுக்கு நன்றி சொன்ன ராஜ்கிரண்:

சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளியின் ஆறாம் வகுப்பு ஆசிரியர் சுப்பிரமணியம் ஐயா அவர்களுக்கும், ஏழாம் வகுப்பு ஆசிரியர் நைனார் முஹம்மது ஐயா அவர்களுக்கும், சிறப்பு தமிழாசிரியர் நடராஜன் ஐயா அவர்களுக்கும், எட்டாம் வகுப்பு ஆசிரியர் கேசவன் ஐயா அவர்களுக்கும், ஹமீதியா மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர் ஜனார்த்தனன் ஐயா அவர்களுக்கும், பத்தாம் வகுப்பு ஆசிரியர் ராஜு ஐயா அவர்களுக்கும், பதினொன்றாம் வகுப்பு ஆசிரியர் ஜெகன்நாதன் ஐயா அவர்களுக்கும், சதக்கத்துன் ஜாரியா பள்ளிகளின் தலைமை ஆசிரியராய் இருந்த செல்வம் ஐயா அவர்களுக்கும், ஹமீதியா மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராய் இருந்த ஜார்ஜ் ஐயா அவர்களுக்கும் என் பணிவையும் நன்றிகளையும் காணிக்கையாக்குகிறேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement