இந்தியாவில் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.
தமிழ் சினிமாவில் நடிகர் விஷால், நடிகர் கருணாஸ், நடிகை நிக்கி கல்ராணி, பாடகர் எஸ் பி பி போன்ற பலர் கொரோனா தாக்கத்திற்கு ஆளாகினர். மேலும், பிரபல பின்னணி பாடகரான எம் பி பி கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் தான் கொரோனா தொற்றில் இருந்து மீண்டார் எஸ் பி பி. அதே போல கடந்த சில நாட்களுக்கு பிரபல நடிகர் ஃப்ளோரன்ட் பெரைரா கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென உடல்நிலை மோசமாகிராஜிவ் காந்தி மருத்துவமனையில் காலமாகி இருந்தார்.
இப்படி தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பிரபல நடிகரான ராமராஜன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார். கொரோனா உறுதியானதை அடுத்து கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்றளவும் ராமாஜனின் பாடல்கள் கிராமத்து வாசிகள் மத்தியில் கேட்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த ராமராஜன் இடையில் நடிப்பதை நிறுத்தி விட்டார். அதன்பின்னர் ஆ தி மு க அணியில் இணைந்து தீவிர அரசியல்வாதியாகவும் அவதாரமெடுத்தார். மேலும், அதிமுக-வின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தார்.