நடிகர், எழுத்தாளர், இயக்குனர் என்று பன்முகம் கொண்ட ராமதாஸ் மாரடைப்பால் காலமாகி இருக்கிறார். இவரை நடிகராக தான் தற்போது இருக்கும் தலைமுறைக்கு தெரியும் ஆனால் எவர் 80 காலகட்டங்களிலேயே தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக தான் அறிமுகமானார் 1986 ஆம் ஆண்டு மோகன் நடித்த ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இவர் இயக்குனராக அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து ராமராஜன் நடித்த ராஜா ராஜா தான் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவின் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் என்ற சாதனையை படைத்த ‘சுயம்வரம்’ படத்தில் 14 இயக்குனர்களில் இவரும் ஒரு இயக்குனராக பணியாற்றி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுயம்வரம் படத்திற்கு பின்னர் இவர் தமிழில் வேறு எந்த படங்களையும் இயக்கவில்லை. இருப்பினும் பல படங்களில் எழுத்தாளராக பணியாற்றி வந்து இருந்தார். அதோடு படங்களிலும் நடித்து வந்தார்.

Advertisement

மேலும், தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். குறிப்பாக சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை, வெற்றிமாறன் இயக்கிய விசாரணை, நயன்தாரா உடன் அறம், விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா, தனுஷுடன் மாரி 2 போன்ற பல்வேறு வெற்றிப்படங்களில் இவர் நடித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் நேற்று இரவு இவர் மாரடைப்பால் காலமாகி இருக்கிறார்.

இப்படி ஒரு நிலையில் தனது தந்தையின் இறப்பு குறித்து ராமதாஸின் மகன் பேசி இருபாதகவது ‘ நேற்று காலை திடீரென்று Tiredஆ இருக்கிறது என்று சொன்னார். அதன் பின்னர் அப்பாவை எம் ஜி எம் மருத்துவமனையில் பரிசோதனைக்காக சென்று அங்கேயே சிகிச்சைக்கு சேர்த்தோம். ஆனால், எதிர்பாராத விதமாக இரவு 10 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு அப்பா இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பேசிய அவர் அவருக்கு திரை துறையில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். இத்தனை வருடம் மிகவும் நேர்மையாகவும் ஈடுபாடுடனும் திரைத்துறையில் இருந்திருக்கிறார். அவரின் இறுதிச்சடங்கு நாளை கேகே நகரில் இருக்கும் அவரது இல்லத்தில் காலை 11 மணி முதல் இருந்து மாலை 5 மணி வரை நடைபெறும் என்று கூறி இருக்கிறார். மேலும் நெசப்பாக்கத்தில் இருக்கும் மயானத்தில் தந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட இருப்பதாகவும் ராமதாஸின் மகன் கூறியிருக்கிறார்.

Advertisement
Advertisement