பெண்ணாக மாறிய பிரபல நடிகர்.! யார் என்று தெரிகிறதா..? முடிந்தால் சொல்லுங்கள்.! புகைப்படம் இதோ..!

0
275
Ramesh

தமிழில் 1987 ஆம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய ‘மனதில் உறுதி வேண்டும் ‘ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் ரமேஷ் அரவிந்த். கமலின் நெருங்கிய நண்பரான இவர், கமலுடன் ‘சதி லீலாவதி, மன்மதன் அம்பு, பஞ்ச தந்திரம் ‘ போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் எண்ணெற்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும், தமிழ் சினிமா துறையில் ஒரு முன்னணி நடிகராக வலம்வர முடியவில்லை. ஆனால், கன்னட திரையுலகில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து கன்னட சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் ரமேஷ் அரவிந்த்.

ThrowBack thursday..When makeup transforms He to She

A post shared by Ramesh Aravind (@ramesh.aravind.official) on

இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் வேடத்தில் இருக்கும் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள், பெண் வேடத்தில் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கமன்ட் செய்து வருகின்றனர். கடந்த 1997 ஆம் கன்னடத்தில் வெளியான ஒரு கன்னட படத்தில் நடிகர் ரமேஷ் அரவித்ந் பெண் வேடமிட்டு நடித்திருந்தார். அந்த படத்தின் போது தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்த நடிகர் பல கன்னட படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது தமிழில் ‘பெரிஸ் பெரிஸ் ‘ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.