கபாலி ரஜினி கெட்டப்பில் மாஸ் காட்டிய ராம்கி – பார்த்தவங்க எல்லாம் ஷாக். புகைப்படம் இதோ.

0
1043
ramki

தமிழ் சினிமாவில் நடிகைகளை போல சில நடிகர்களும் வயதானாலும் இளமை தோற்றோதோடு தான் இருப்பார்கள், அந்த வகையில் நடிகர் ராம்கிக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் சொல்வது போல வயசானாலும் அழகு மாறல என்பதர்க்கு உதாரணமாக இருக்கிறார் நடிகர் ராம்கி. தமிழில் 1987 ஆம் ஆண்டு சின்ன பூவே மெல்ல பேசு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ராம்கி அதன் பின்னர் தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வந்த ராம்கி எண்ணற்ற ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.

ramki-latest-photo

ரஜினி, கமல் என்று டாப் நடிகர்கள் இருந்த காலகட்டத்திலேயே இவரது படங்கள் ஒரு புறம் பல வெற்றிகளை குவித்தது. அதிலும் குறிப்பாக ராம்கி நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் என செந்தூரப்பூவே, மருதுபாண்டி, இணைந்த கைகள் போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம். ஹீரோவாக நடித்து வந்த ராம்கி இறுதியாக 2013 ஆம் ஆண்டு வரை ஹீரோவக தான் நடித்து வந்தார்.

இதையும் பாருங்க : என் விவகாரத்துக்கு காரணம் ஷிவானி மீதானா காதலா ? முதன் முறையாக மனம் திறந்த அஸீம்.

- Advertisement -

ஒரு காலத்தில் பல முன்னனி ஹீரோக்களுக்கு மத்தியில் டாப் லிஸ்டில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் ஹீரோ மார்க்கெட்டை இழந்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். ஆனால், அதிலும் இவரால் நிலைத்து நிற்க முடியவில்லை. பிரியாணி திரைப்படத்திற்கு பின்னர் இடையில் 3 ஆண்டுகள் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். இறுதியாக இவர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தில் நடித்து இருந்தார்.

ramki-latest-photo-01

தற்போது இவர் ஆர் கே சுரேஷ் நடித்துள்ள ‘வேட்டை நாய்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்ட க ராம்கி, கபாலி படத்தில் வந்த ரஜினி கெட்டப்பில் கருப்பு முடி வெள்ளை தாடி என டோட்டலா வேற லெவல் ஸ்டைலிஷ் ஆக மாறிவிட்டார். இந்த விழாவில் ராம்கியை பார்த்த பலரும் கொஞ்சம் வியப்போடு தான் பார்த்தார்கள். ராம்கி இந்த விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இந்த புகைப்படங்கள்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

-விளம்பரம்-
Advertisement