என் விவகாரத்துக்கு காரணம் ஷிவானி மீதானா காதலா ? முதன் முறையாக மனம் திறந்த அஸீம்.

0
1531
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சிவானி ஆனால் இவருக்கு சீரியலில் கிடைத்த ரசிகர்களை விட போட்டோ ஷூட் மூலம் கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம். தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மூலம் இளசுகளை கவர்ந்த ஷிவானியை 20 லட்சத்திற்கும் மேலானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் பிரபலமடைந்த ஷிவானிக்கு கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தனக்கு கிடைத்த வாய்ப்பை இவர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is azeem.jpg

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை இவர் பாலா பின்னால் சுற்றியதை தவிர வேறு எதையும் செய்யவில்லை, மேலும், இவரும் பாலாஜியும் காதலிப்பதாகவும் சர்ச்சை எழுந்தது. ஷிவானி பிக் பாஸில் பங்குபெறுதற்கு முன்பாகவே சீரியல் நடிகர் அஸீமை காதலித்து வந்ததாக சர்ச்சை எழுந்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் என்று பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை அஸீம்.

இதையும் பாருங்க : மூக்குத்தி அம்மன்ல அப்பாவி குடும்ப பெண்ணாக நடித்த நடிகையா இப்படி ஒரு கிளாமர் உடையில்.

- Advertisement -

இவரும் ஷிவானியும் பகல் நிலவு சீரியலில் இணைந்து நடித்த போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் அதனால் அசீம் மற்றும் அவரது மனைவிக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் தான் தனது மனைவியை பிரிந்துவிட்டதாக அசீம் அறிவித்து இருந்தார். மனைவியை விவாகரத்து செய்ததற்க்கு முக்கிய காரணம் ஷிவானியுடனான காதல் தான் என்று சர்ச்சை எழுந்தது. இப்படி ஒரு நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள அசீம், ஷிவானியுடன் பகல் நிலவு சீரியல் ஜோடியாக நடித்தேன். அதன் பின்னர் ஜோடி நிகழ்ச்சியில் நாங்கள் ஒன்றாக இணைந்து நடனமாடி இருக்கிறோம். அதேபோல கடைக்குட்டி சிங்கம் சீரியலிலும் இருவரும் சேர்ந்து நடித்தோம் .

This image has an empty alt attribute; its file name is 1-7-577x1024.jpg

அந்த சமயத்தில் நாங்கள் இருவரும் ரொமான்டிக் ஜோடி என்ற ரீதியில் பல விருதுகளை வாங்கினோம். உடனே நாங்கள் இருவரும் காதலிப்பதாக பேச்சிகள் கிளம்பியது. உண்மையில் எனக்கும் சிவாவுக்கும் தொழில் ரீதியான தொடர்பை தவிர வேறு எந்த தொடர்பும் கிடையாது. சில நாட்களுக்கு முன்னர் தான் எனக்கு விவாகரத்து கிடைத்தது. நான் தற்போது டிவோர்சீ. இதை வைத்து ஷிவானியிடன் நான் திருமணம் செய்யப்போகிறேன் என்று கிளப்பி விடுகிறார்கள். மேலும்,ஷிவானிகாக தான் என்னுடைய மனைவியை விவாகரத்து செய்தேன் என்று கூட பேசுகிறார்கள். அந்த பெண்ணையும் நிம்மதியா இருக்க விடுங்க என்னையும் நிம்மதியா நடிக்க விடுங்க என்று புலம்பியிருக்கிறார் அஸீம்.

-விளம்பரம்-
Advertisement