என்னது ராணாவா இது..? உடல் எடை குறைத்து இப்படி மாறிட்டாரே.! அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
560
Rana-daggubathi
- Advertisement -

தமிழில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த ‘ஆரம்பம்’ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பரிட்சியமானார் நடிகர் ராணா. அதன் பின்னர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தாலும் ‘பாகுபலி’ படத்தின் மூலம் உலகலவில் பிரபலமடைந்தார். பாகுபலியில் இவரது உடலமைப்பை கண்டு பலரும் வியந்து போனர். ஆனால், தற்போது இவரை கண்டால் ராணாவா இது என்று ஆச்சர்யபட்டு விடுவீர்கள்.

-விளம்பரம்-

rana

- Advertisement -

சமீபத்தில் நடிகர் ரானாவின் வீட்டில் அருகில் இருக்கும் சில சிறுவர்கள் பிஸ்கேட் மற்றும் குக்கீஸ் சிலவற்றை செய்து அதனை விற்று கிடைத்த பணத்தை கேரள மக்களுக்கு நித்தியாக வழங்கினார். ட்விட்டரில் இந்த தகவலை பதிவிட்ட நடிகர் ராணாஅந்த சிறுவர்களுதுடன் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில் ராணாவை கண்ட ரசிகர்கள் மிகவும் ஆச்சர்யமடைந்தனர். அதற்கு முக்கிய காரணம் பாகுபலி படத்தில் வாட்ட சாட்டமான உடல் அமைப்பில் இருந்த நடிகர் ரானா தற்போது உடல் எடை முற்றிலும் குறைந்து மிகவும் ஒல்லியாக காணப்பட்டார்.

-விளம்பரம்-

இதனால் பலரும் நடிகர் ராணாவிற்கு ஏதாவது உடல் நிலை சரியில்லையா என்று சந்தேகித்து வந்தனர். ஆனால், உண்மையில் படத்திற்காக தான் நடிகர் ராணா உடல் எடையை குறைத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. நடிகர் ராணா தற்போது தெலுங்கு நடிகர் என் டி ஆர் வாழ்கை வரலாற்று படத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த கதாபாத்திரத்திற்காக தான் தனது உடல் எடையை குறைத்துள்ளார் நடிகர் ராணா.

Advertisement