-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

நாடக காதல் படமா, திருமாவை தாக்கினேனா? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ரஞ்சித்

0
54

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் படங்களில் நண்பனாகவும், வில்லனாகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் ரஞ்சித். இவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் நடித்து இருக்கிறார். இறுதியாக இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் ஜீவன் நடித்த ‘அதிபர்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன் பின்னர் தமிழில் இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

-விளம்பரம்-

சிறிய இடைவெளிக்கு பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘செந்தூரப்பூவே’ தொடர் மூலம் மீண்டும் நடிக்கத் துவங்கினார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ தொடரில் பழனிச்சாமி என்ற ரோலில் கலக்கி வருகிறார். சிறிய இடைவெளிக்கு பின் தற்போது நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்திருக்கும் படம் ‘குழந்தை C/O கவுண்டம் பாளையம்’. இந்த படம் ஜூலை 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் இந்த படத்தினுடைய ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருகிறது.

ரஞ்சித் படம் குறித்த சர்ச்சை:

அதிலிருந்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, நடிகர் ரஞ்சித் அவர்கள் மறைமுகமாக விசிக தலைவர் திருமாவளவனை தான் தாக்கி பேசியிருக்கிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் நடிகர் ரஞ்சித், ஒரு குடும்பம் என்பது அதில் இருக்கும் குழந்தைகள் தான் பெற்றோருக்கு அஸ்திவாரமே. அப்படிப்பட்ட குழந்தைகள் இளம் பருவத்தை கடந்து வரும் போது அவர்கள் அறியாத வயதில் காதல் என்ற பெயரில் தூக்கி செல்வதற்கு ஊர் ஊராக ஒரு கும்பல் சுத்திக் கொண்டிருக்கின்றது.

ரஞ்சித் அளித்த பேட்டி:

-விளம்பரம்-

இதை நான் கற்பனையாக சொல்லவில்லை. நிஜத்திலேயே நான் அதை பார்த்திருக்கிறேன். நாடக காதல் என்று சொன்ன உடனேயே பலரும் என்னை ஜாதி படம் எடுப்பவன் என்று முத்திரை குத்தி விட்டார்கள். ட்ரைலரில் ஓசிக என்ற பெயரில் கட்சி ஒன்று வரும். அதனை எல்லோருமே வேற மாதிரி பேசுகிறார்கள். ஓசிக என்பது ஓசியில் அடுத்த பெண்களை விற்று தின்பவன், ஓசியில் சோறு தின்பவன் என்பது தான் நான் வைத்தேன். நான் படத்தில் வைத்திருக்கும் சில குறியீடுகளை வைத்து நீங்கள் இவரை தான் குறிப்பிடுகிறீர்கள், இதை மையமாக வைத்துதான் எடுத்திருக்கிறீர்கள் என்று தேவையில்லாமல் முடிச்சு போட்டு விடுகிறார்கள்.

-விளம்பரம்-

சர்ச்சைகளுக்கு கொடுத்த விளக்கம்:

இந்த விஷயத்தில் என்னை இவர், அவர் மீது பழி சுமத்தி விட்டு சென்றார் என்று சொல்லிட்டு போக முடியாது. இங்கு பெரிய தவறு நடக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் நடக்கிறது. நாம் என்ன செய்தாலும் நாலு பேரு நாலு விதமாக சொல்லுவார்கள். குடும்பம் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது அதில் ஒருவன் தீயை வைத்து விடுவான். நான் எந்த ஒரு சமூகத்தையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. குற்றம் உள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும். அதற்கு நான் பொறுப்பல்ல. இந்த படம் வருகிற ஜூலை 5-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நாடகக் காதலை மையப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படும் வகையில் இந்த படத்தை எடுத்திருக்கிறோம்.

படம் குறித்து சொன்னது:

ஒரு பெண்ணை அவர்களுடைய பெற்றோர் கடுமையாக உழைத்து கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினாள். திடீரென்று எவனாவது ஒருவன் காதல் என்ற பெயரில் தூக்கிப் செல்வான். இதற்கு சமூக நீதியா? காவல் நிலையத்தில் போன், கார் எது காணாமல் போனாலும் புகார் அளிக்கலாம். அதேபோல் ஒரு பெண் காணாமல் போனாலோ, தூக்கி சென்றாலோ அதற்கு என்ன பாதுகாப்பு? நீங்கள் எல்லாம் சேர்ந்து அந்த பெண்ணுக்காக ஒரு கையெழுத்து போட்டால் அந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகி விடுமா? நாடக காதல் என்று சொன்ன உடனே என்னை சாதி வெறியன் சொல்கிறார்கள். சொல்லிக் கொள்ளுங்கள் தவறு கிடையாது என்று பேசியிருக்கிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news