சிவகார்த்திகேயனின் 25-வது படத்தின் கதை குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக சிவா இருக்கிறார்.

கடைசியாக இவர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த அயலான் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், பாலா சரவணன், பானுப்ரியா உட்பட பல பாலா நடித்திருந்தார்கள். ஏலியன் ஜனரில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. அதோடு பல சிரமங்களுக்கு மத்தியில் ஐந்து ஆண்டுகள் கழித்து வெளிவந்த இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.
அமரன் படம்:
தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தினுடைய டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் 44 ராஷ்ட்ரிய ரைபிள் படை பற்றிய வசனங்களும், தீவிரவாதிகளுடன் சண்டை காட்சிகளும் காட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

சிவா நடிக்கும் படங்கள்:
சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்தது. தற்போது இந்த படத்தினுடைய போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதை அடுத்து சிவகார்த்திகேயன் அவர்கள் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தில் ருக்மணி வசந்த், மோகன்லால், வித்யூத் ஜம்வால் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
சிவா நடிக்க போகும் படங்கள்:
தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், ஏ ஆர் முருகதாஸ் ஒரே சமயத்தில் சிவகார்த்திகேயன் படத்தையும், ஹிந்தியில் சல்மான் கான் படத்தையும் இயக்கிக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்தடுத்த படங்களின் அப்டேட் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. சிவா அவர்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார். தற்போது வெங்கட் பிரபு தளபதி விஜயை வைத்து கோட் என்ற படத்தை எடுத்து வருகிறார். இதை முடித்த உடனே சிவாவை வைத்து இயக்க இருக்கிறார்.

சிவா 25வது படம்:
குட் நைட் பட இயக்குனர் விநாயக் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இன்னொரு பக்கம் டான் சிபி சக்கரவர்த்தியும், சிவகார்த்திகேயனுக்கு கதை எழுதி வைத்திருக்கிறார். இதைத் தவிர சுதா கொங்காராவும் சிவாவுக்காக ஒன் லைன் சொல்லியிருக்கிறார். அது புறநானூறு கதை இல்லை என்று கூறப்படுகிறது. இது இல்லாமல் கிரிக்கெட் வீரர் நடராஜனின் பயோபிக் கதையிலும் சிவா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான ஓன்லைன் கதையும் கூறப்பட்டிருக்கிறது. இப்படி தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் சிவா கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.






