ஆன்லைனில் ஆர்டர் செய்து அனிதா சம்பத் ஏமாந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமாகி பிரபலமான நடிகையாக இருப்பவர் அனிதா சம்பத். இவர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் போன்ற படத்திலும் நடித்திருந்தார்.
இதன் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அந்த பிரபலத்தினால் அனிதா சம்பத் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். ஆனால், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை பெற்றார். இதனால் சீக்கிரமாகவே அனிதா நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு அனிதாவிற்கு நிறைய வாய்ப்புகள் வந்தது.
அனிதா குறித்த தகவல்:
தற்போது அனிதா நிறைய விளம்பரம், படங்களில் நடித்து கொண்டு வருகிறார். மேலும், இவர் தனியாக யூடுயூப் சேனல் ஒன்று ஆரம்பித்து தன் கணவருடன் சேர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கூட இவர் தங்களின் புது வீடு கிரகப்பிரவேசம் செய்து இருந்த வீடியோவை பதிவிட்டு இருந்தார். பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
சோசியல் மீடியாவில் அனிதா:
அதோடு பிக் பாஸில் இவருக்கு ஏகப்பட்ட ஹேட்டர்ஸ்கள் உருவாக்கி இருந்தார்கள். இதனால் இவர் சமூக வலைதளத்தில் என்ன பதிவிட்டாலும் இவரை திட்டி தீர்த்து வருகிறார்கள். இருந்தாலும், அனிதா பதிவிட்டு வருகிறார். தற்போது இவர் படங்களில் நடித்துக் கொண்டும் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாகவும் இருந்து கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிதா சம்பத் பதிவிட்டு இருக்கும் பதிவு தான் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
அனிதா ஆதங்கம்:
அதாவது, நடிகை அனிதா சம்பத் அவர்கள் ஆன்லைனில் ஒரு பொருளை ஆர்டர் செய்திருக்கிறார். அந்த பார்சலைப் பிரித்து பார்த்து தான் இவருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், இவர் அழகான புடவை ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால், இவருக்கு வந்தது பழைய ரேஷன் புடவை மாதிரி இருக்கும் ஒரு புடவை.
நெட்டிசன்கள் கருத்து:
சொல்லப்போனால், ரேஷன் புடவை விட மிக மோசமாக அழுக்கு சேலையை போல அந்த புடவை இருந்திருக்கிறது. இதை தான் அனிதா சம்பத் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தன்னுடைய ஆதங்கத்தை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு நெட்டிசன்கள் பலருமே, ஆன்லைனில் பலர் இப்படித்தான் ஏமாற்று வேலை செய்கிறார்கள். ஜாக்கிரதை ஆகத்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.