விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவின் தந்தையாக நடித்துக் கொண்டிருப்பவர் ரவிச்சந்திரன். இவர் இந்த சீரியலுக்கு முன்பே பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் நிறைய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். இவர் கும்பகோணத்தை சேர்ந்தவர். இவர் ஆரம்பத்தில் மசாலா கம்பெனி ஒன்றை நடத்தி வந்து இருந்தார். ஆனால், அந்த தொழிலில் பெரிய நஷ்டம் ஏற்பட்டு சொந்த ஊரை விட்டு கிளம்பி வேலை தேடி சென்னை வந்தார் ரவிச்சந்திரன்.
பின் நண்பர்கள் மூலம் தான் இவர் பல விளம்பர படங்களில் நடித்து இருந்தார். அப்படியே அவருக்கு டிவி, சினிமா என்று வாய்ப்புகள் வந்தது. தற்போது இவர் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனா அப்பாவாக நடித்து கொண்டு இருக்கிறார். அதேபோல் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் என்ற தொடரில் நடத்து வருகிறார். இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு தான் ஒளிபரப்பப்பட்டது. இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5ல் இந்த சீரியல்
இருக்கிறது.
ரவிச்சந்திரன் குறித்த தகவல்:
இதை அடுத்து இந்த சீரியலில் நடித்ததற்காக நடிகர் ரவிச்சந்திரனுக்கு விருது கிடைத்திருக்கிறது. இதுதான் இவருடைய முதல் விருதும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் ரவிச்சந்திரன், என்னுடைய சொந்த ஊர் கும்பகோணம். நடிப்புக்கும் எங்களுடைய குடும்பத்திற்கும் சம்பந்தமே கிடையாது. நான் மசாலா கம்பெனி நடத்தி இருந்தேன். பிசினஸில் திடீரென்று நஷ்டம் வந்ததால் தான் நான் கம்பெனியை மூடி வேலை தேடி சென்னைக்கு வந்தேன்.
ரவிச்சந்திரன் பேட்டி:
அப்பதான் ஒருவர் மூலமாக எனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு வயது 40 ஆகிவிட்டது. எல்லா வேலைகளையும் விருப்பத்தோடு செய்வதை போல தான் நான் நடிப்பையும் செய்தேன். ஆனால், அந்த நடிப்பு என்னை நாலு பேரிடம் அறிமுகப்படுத்தி வைத்தது. ஒரு காலத்தில் தோத்துப்போன பிசினஸ்மேனாக எந்த ஊரில் அவமானப்பட்டேனோ அதே சொந்த ஊர் என்னை நடிகனாக வரவேற்றது. அதனாலயே நடிப்பை விடக்கூடாது என்று நான் இன்னும் அக்கறையுடன் கவனத்தோடு நடிக்க தொடங்கினேன். சரவணா மீனாட்சி சீரியல் மூலம் எனக்கு ஓரளவு பெயர் கிடைத்தது.
சினிமா அனுபவம்:
அதை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் எனக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பும் பெருமை கிடைத்தது. விஜய் டிவி மட்டுமில்லாமல் ஜீ தமிழ், சன் டிவியில் மொத்த சேனல்களிலும் வாய்ப்பு வந்தது. பல சீரியல்களில் நடித்தாலும் எனக்கென்று ஒரு விருதும் கிடைக்கவில்லை. அது எனக்குள் வருத்தத்தை கொடுத்தது. இருந்தாலும் மக்களிடம் எனக்கு பெயர் கிடைத்தது சந்தோஷப்பட்டு கொண்டேன். இப்படி இருக்கும்போதுதான் போன வருஷம் விகடன் சின்னத்திரை விருது வந்தது. அதில் நாமினேஷன் பட்டியலில் என் பெயர் வந்தது.
விருது குறித்து சொன்னது:
எனக்கு விருது கிடைக்கவில்லை என்றாலும் அது எனக்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்தது. இப்போது மருமகள் தொடருக்கு விருது கிடைத்திருக்கிறது. என் வாழ்க்கையில் நடிப்புக்கு என்று கிடைத்த முதல் விருது இது. ரொம்ப சந்தோஷம் இதுக்கு அளவே இல்லை. அதை பெரிய அவமானமாக நினைத்தேன். இப்போ நடிப்புக்காக ஒரு விருதை வாங்குகிறேன் என்று நினைக்கும் போது நாம் சரியாக வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்ற சந்தோஷம் இருக்கிறது என பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.