சித்தி 2 வில் சிவகுமாருக்கு பதிலாக சித்தப்பா வேடத்தில் நடிப்பது இவர் தானா ?

0
91343
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் 1980 முதல் 1990 ஆம் ஆண்டு காலகட்டங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ராதிகா சரத்குமார். ராதிகா அவர்கள் தமிழ் சினிமாவில் 80களில் இருந்து தொடங்கி இன்று வரை இடைவிடாமல் வெள்ளித்திரை, சின்னத்திரை என மாறி மாறி நடித்து வருகிறார். மேலும், சினிமா துறையில் தனக்கென ஒரு அடையாளத்தையும் உருவாக்கியவர். இவர் பிரபல சன் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணாமலை, வாணி ராணி,செல்வி, அரசி என பல்வேறு தொடர்களில் நடித்து வந்தார்.கடைசியாக அவர் சந்திரகுமாரி என்ற சீரியலிலும் நடித்து உள்ளார். தொலைக்காட்சி சீரியல் என்றாலே அனைவருக்கும் மனதில் வருவது ஒன்று தான். வேற எதும் இல்ல அது சித்தி சீரியல்.

-விளம்பரம்-

1999 ஆம் ஆண்டின் இறுதியில் தான் சன் டிவியில் ஒளிபரப்பானது “சித்தி” சீரியல். இந்த சித்தி சீரியல் தமிழக மக்களிடையே அதிக வரவேற்பு பெற்றது. இந்த சீரியலில் கதாநாயகியாக ராதிகா சரத்குமார் நடித்தார். சித்தி சீரியல் தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது. இந்த சீரியல் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் வெற்றிகரமாக ஓடியது. இந்த சீரியலிலை ராதிகா சரத்குமார் அவர்களே தயாரித்து இருந்தார். அது மட்டுமில்லாமல் முதல் முறையாக பட்டி தொட்டி எல்லாம் வெற்றி அடைந்த சீரியலும் இது தான். இந்நிலையில் தற்போது “சித்தி 2” சீரியல் சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக போகிறது என்ற தகவல் அதிகாரப் பூர்வமாக அறிவித்து உள்ளனர்.

- Advertisement -

மேலும், சின்னத்திரையில் ராதிகா அவர்கள் இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறது காரணம் சித்தி சீரியல் தான். சித்தியின் இரண்டாவது பாகம் வருகிற 27-ஆம் தேதி முதல் வெளியாக உள்ளது. இந்த சித்தி சீரியல் முதல் பாகத்தில் நடிகர் சிவகுமார் நடித்திருந்தார். தற்போது இவருக்கு பதிலாக இரண்டாவது பாகத்தில் நடிகர் பொன்வண்ணன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சித்தப்பா கதாபாத்திரத்தில் சிவகுமாருக்கு பதிலாக நடிகர் பொன்வண்ணன் நடிக்கிறார். தற்போது சித்தி சீரியலின் இரண்டாம் பாகத்திற்கான நடிகர்களை தேர்வு செய்து உள்ளார்கள் என்ற தகவல் வெளியானது. மேலும், இந்த சித்தி 2 சீரியலை கே.விஜயன் என்பவர் இயக்க உள்ளார். இந்த சீரியலில் ராதிகா, பொன்வண்ணன், ரூபினி, நிஷாந்தி (பானுப்பிரியாவின் தங்கை), டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்க உள்ளார்கள் என்ற தகவலும் வெளிவந்தது.

மேலும், சித்தி 2ம் பாகத்திற்கான சில காட்சிகள் படமாக்கப்பட்டு வெளிவர உள்ளது என்ற தகவல் இணையங்களில் பரவியது. இதனால் ரசிகர்கள் அதிக ஆர்வமுடன் சீரியலை எதிர்நோக்கி உள்ளனர். சித்தி சீரியலின் ஆரம்பத்திற்கு தமிழகம் முழுவதும் காத்துக் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் சித்தப்பாவாக பொன்வண்ணன் நடிப்பதைப் பார்க்க அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார். மேலும், முதல் பாகத்தைப் போலவே சித்தி இரண்டாம் பாகமும் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement