பிரபல ஆர் ஜேவும், நடிகருமான ஆர். ஜே பாலாஜி சமீப காலமாக மக்கள் பிரச்சனைகளை பற்றி பல்வேறு இடங்களில் பேசி இளைஞர்கள் மத்தியில் நல்ல பெயரையும், அபிமானதையும் பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் விரைவில் அரசியலில் வருவார் என்று சமீபத்தில் வெளியான சுவரில் எழுதப்பட்ட வாசகம் ஒன்று தெரியப்படுத்தியிருந்தது.

Advertisement

ஆர்.ஜே பாலாஜி பிரபல பிக் எப்.எம் வானொலி மையத்தில் “கிராஸ் டால்க்” என்ற வானொலி காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் படங்களில் சிறு சிறு காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். படங்களை நடித்ததோடு மட்டும் இல்லாமல் இவர் தமிழ்நாட்டில் நடந்த அணைத்து மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்ததோடு தம்மால் முடிந்த உதவிகளையும் செய்து வந்தார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஆர். ஜே பாலாஜி விரைவில் அரசியலில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கும் விதமாக ஒரு சுவரில் எழுதி இருந்த வசனங்கள் குறிப்பிட்டிருந்தனர். அதில் ” மே 18, இளைஞசர்களை வழிநடத்த, தமிழகத்தில் மாற்றம் காண, அரசியலியல் களம் புகும் ஆர். ஜே பாலாஜி அவர்களை வருக! வருக!! என வரவேற்கின்றோம் ! ” என்று எழுதப்பட்டிருந்தது..

Advertisement

மேலும்,அந்த வாசகத்தில் ஆர். ஜே பாலாஜியின் உருவம் வரையபட்டதுடன் மட்டும் இல்லாமல், சிகப்பு ,பச்சை, கருப்பு ஆகிய மூவண்ண கொடியும் அந்த கொடியின் மையத்தில் காளையின் உருவமும் வரையப்பட்டுள்ளது. இதனால் ஆர். ஜே பாலாஜி கட்சியே தொடங்கி விட்டாரா என்று அனைவரும் கூறிவந்தனர்.

Advertisement

இந்நிலையில் அந்த சுவர் விளமபரத்தில் இருக்கும் வசனத்தை மெய்யாக்கும் விதமாக தனது ட்விட்டர் மற்றும் முக நூல் பக்கத்தில் தனது சுயவிவர படத்தை மாற்றியுள்ளார் பாலாஜி. அதில் அந்த சுவர் விளம்பரத்தில் வரையப்பட்ட்ட கொடியில் இருந்த காளையின் உருவத்தை தனது புது சுயவிவர படமாக மாற்றியுள்ளார். இதனை பார்த்த ட்விட்டர் வாசிகள் சிலர் இவரை வாழ்த்தினாலும். ஓரு சில ரசிகர்கள் “என்ன கென்யா நாட்டின் கொடியை தலை கீழாக திருப்பி கட்சி கொடியாக அறிவித்துவிட்டீர்கள் ” என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

Advertisement