தொடரும் சோகம், 9 ஆண்டுகளுக்கு முன் 9 வயது மகன் தற்போது தந்தை – நடிகர் மனோகர் இன்று காலமானார்.

0
383
RnrManohar
- Advertisement -

எழுத்தாளரும், இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான RNR மனோகர் இன்று காலமாகி இருக்கும் சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழில் கடந்த 1994ஆம் ஆண்டு வெளியான மனிதன் திரைப்படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமானவர் மனோகர். அதன் பின்னர் தென்னவன், புதுமைப்பித்தன், கோலங்கள் போன்ற பல்வேறு படங்களில் எழுத்தாளராக பணியாற்றியிருக்கிறார். மேலும், இவர் மாசிலாமணி வேலூர் மாவட்டம் போன்ற இரண்டு படங்களையும் இயக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

அதுமட்டுமல்லாது இவர் மிருதன், கைதி, டெட்டி போன்ற எண்ணெற்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், ஆர்.என்.ஆர்.மனோகர் சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், இவர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : சூர்யாவிற்காக 16 மாதங்கள் கழித்து ட்விட்டரில் மீண்டும் வந்த வெற்றி மாறன் – என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

- Advertisement -

இது ஒருபுறம் இருக்க சென்னை கே.கே.நகரில் உள்ள பிரபல பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். இதே பள்ளியில் தான் இவரது மகன் ரஞ்சன் PSBB பள்ளியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நான்காம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி காலை பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சியில் ஈடுபட்ட போது நீரில் மூழ்கி பலியானார்.

மகன் இறந்த தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த ரஞ்சனின் பெற்றோர், மகனின் உடலை கண்டு கண்ணீர் விட்டு அழுதனர்.  இந்த சம்பவம் குறித்து பேசிய மகோனர், பயிற்சியின் போது, பயிற்சியாளர்கள் இல்லாத காரணத்தினால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மகன் இறந்த 9 ஆண்டுகளில் தற்போது இவருக்கும் இறந்துள்ளது பெரும் சோகமே.

-விளம்பரம்-
Advertisement