சூர்யாவிற்காக 16 மாதங்கள் கழித்து ட்விட்டரில் மீண்டும் வந்த வெற்றி மாறன் – என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
794
vetrimaran
- Advertisement -

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்து இருந்தது. மேலும், இந்தப்படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே போல இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக பல வன்னிய சமூகத்தினர் குற்றம் சாட்டினார்கள். குறிப்பாக இந்த படத்தில் வில்லனாக வந்த ‘குருமூர்த்தி’ என்ற கதாபாத்திரத்தின் வீட்டில் இருக்கும் காலண்டரில் அக்னி குண்டம் படம் காட்டப்பட்டது.

-விளம்பரம்-

இது பல வன்னியர் சமூகத்தினரை காயப்படுத்தவாக குற்றச்சாட்டுங்கள் எழுந்தது. இதனால் படத்தில் அந்த அக்னி கலசம் நீக்கப்பட்டது. இருப்பினும் இந்த படத்தில் உண்மையான செங்கேணி பார்வதிக்கு நியாயம் கிடைக்க போராடிய வன்னியரின் பெருமையை சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த படத்திற்கு எதிராகவும் சூர்யாவிற்கு எதிராகவும் பல்வேரு வன்னிய அமைப்புகள் தொடர்ந்து எதிர்புகளை தெரிவித்து வருகிறது. அதே போல சூர்யாவிற்கு அவரது ரசிகர்கள் ஆதரவாக இருந்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : மாளவிகா மோகனன் எல்லா இப்போதான். அப்போதே படு Bold போட்டோ ஷூட் நடத்தியுள்ள ரம்யா கிருஷ்ணன்.

- Advertisement -

மேலும், பல்வேரு பிரபலங்களும் சூர்யாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த விவகாரத்தில் சூர்யாவிற்கு தன் ஆதரவை தெரிவிக்கும் வகையில் இயக்குனர் வெற்றி மாறன் கிட்ட தட்ட 1 ஆண்டுகள் கழித்து ட்வீட் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சிறு அறிக்கையில், “பாதிக்கப்பட்டவர்களின் அவல நிலையை உலகறியச் செய்யும் வகையில் இப்படத்தை உருவாக்கிய இயக்குநர் ஞானவேலின் அர்ப்பணிப்பும், சமூக நீதிக்காக சூர்யாவின் தொடர் முயற்சிகளும் உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது. இந்த மாற்றத்தை விரும்பாதவர்கள் மத்தியில் இந்தப் படங்கள் கோபத்தை ஏற்படுத்துவது இயல்பே.

நாங்கள் சூர்யாவின் பக்கம் நிற்கிறோம். சமூகத்தில் சமத்துவமின்மையையும் அநீதிகளையும் கேள்வி கேட்கும் எந்தவொரு படைப்புமே சமூக நீதிக்கான ஆயுதம்தான். ஜெய் பீம் படக்குழுவிற்கு நாங்கள் எப்போதும் துணையாக நிற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த அறிக்கையை பகிர்ந்து வெற்றிமாறன் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ”சரியான விஷயத்தைச் செய்வதற்காக யாரும் தாழ்வாக உணரும் நிலைக்குத் தள்ளப்படக் கூடாது. நடிகர் சூர்யா, ஒரு திரை நட்சத்திரத்திற்கான அர்த்தத்தை மறுவரையறை செய்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement