அட, ரோபோ ஷங்கர் படையப்பா படத்தில் நடிச்சிருக்கார் ? எந்த காட்சியில் தெரியுமா ?

0
3713
robo
- Advertisement -

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர், நடிகைகள் சென்று உள்ளனர். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து பல்வேறு நடிகர், நடிகைகள் தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.

-விளம்பரம்-

சின்னத்திரையில் தொடங்கிய இவரது பயணம் வெள்ளித்திரையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார். முதலில் பாடி பில்டராக இருந்த இவர் மேடை காமெடியனாக அறிமுகமானர்.அதன் பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

- Advertisement -

நடிகர் ரோபோ ஷங்கர், தொலைக்காட்சியில் வந்த பின்னர் தான் சினிமாவில் நடிக்கத் துவங்கினார் என்று பலர் நினைத்து இருக்கலாம். ஆனால், அவர் தொலைக்காட்சியில் வருவதற்கு முன்பே படங்களில் நடித்துள்ளார். அதுவும் ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா படத்தில் கூட நடித்திருக்கிறார். அந்த படத்தில் இடம்பெறும் என் பேரு படையப்பா பாடலில் வரும் ஒரு சில பையில்வான்களில் ஒருவராக நடித்துள்ளார் ரோபோ ஷங்கர். அதன் பின்னர் தான் தொலைக்காட்சியில் மேடை கலைஞ்சராக அறிமுகமானார்.

பின் சினிமாவில் அறிமுகமான நடிகர் ரோபோ ஷங்கர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து உள்ளார். 2002 ஆம் ஆண்டு நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒரு மகள் சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement