சந்தானத்தின் உறவுக்கார பெண் மினி லாரி ஏற்றிக்கொலை – திடுக்கிடும் பின்னனி. போலீஸ் உதவியை நாடிய சந்தானம்.

0
1940
santhanam

தமிழ் சினிமாவில் காமெடியான இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். இந்த நிலையில் இவரது உறவுக்கார பெண் ஒருவர் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தானத்தின் தூரத்து உறவினர் பெண் ஜெயபாரதி. இவர் திருவாரூர் அருகே உள்ள கிடாரங் கொண்டான் என்ற கிராமத்தை சேர்ந்தவர். 2005 இல் இவருக்கு அமெரிக்காவில் வேலை பார்க்கும் விஷ்ணு பிரகாஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பின்னர் ஜெயபாரதி தனது கணவருடன் அமெரிக்காவில் வசித்து வந்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.

திருமணத்திற்கு பின் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயபாரதி தனது கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு திருவாரூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். மேலும், இவரது கணவர் தான் இவரை தாய் வீட்டிற்கு திட்டி அனுப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த ஜெயபாரதி சொந்த ஊரிலேயே தற்காலிகமாக அஞ்சல் துறையில் வேலை செய்து வந்துள்ளார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இவர் வேலை பார்த்து விட்டு வீடு திரும்பிய போது ஏடிஎம்மில் பணம் நிரப்ப செல்லும் வாகனத்தால் மோதி உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இது எதிர்ச்சியாக நடந்த விபத்து போல தெரியவில்லை, அந்த பெண்ணை திட்டமிட்டு ஏற்றியது போல தான் இருக்கிறது என்று கூறியுள்ளனர். இதனால் ஜெயபாரதியின் உறவினர்கள் விஷ்ணு பிரகாஷ் மீது சந்தேகமடைந்து. அவர் மீது புகார் அளித்தனர்.

இதையடுத்து விபத்து ஏற்படுத்திய காரை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடித்தனர் ஆதாரத்துடன் புகார் கொடுத்த போது போலீசார் இந்த வழக்கை விசாரிப்பதில் தாமதம் காட்டிய நிலையில் இதுகுறித்து ஜெயப்பாரதியின் உறவினரான நடிகர் சந்தானத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. சந்தானமும் தனது செல்வாக்கை பயன்படுத்தி இந்த வழக்கை மறு விசாரணை நடக்க ஆவன செய்த பின்னர் தனிப்படை அமைத்து விசாரித்த காவல்துறையினர் மீண்டும் விசாரணையை துவங்கினர்.

-விளம்பரம்-

ஜெயபாரதி தனது கணவர் விஷ்ணு பிரகாஷ் மற்றும் அவர் வேலை செய்யும் அலுவலகத்திற்குபுகாருடன் கூடிய விவாகரத்து நோட்டீஸ் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இதனால் விஷ்ணு பிரகாஷ் வேலைக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் நோட்டீசை வாபஸ் வாங்குமாறு விஷ்ணு பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜெயபாரதியை கடுமையாக மிரட்டி உள்ளார்கள். ஆனாலும், அவர் வாபஸ் வாங்க மறுத்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஷ்ணு பிரகாஷ் கூலிப்படையை ஏவி ஜெயபாரதி திட்டம்போட்டு காரை ஏற்றி கொன்றுள்ளார் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்த சம்பவத்தில் உண்மை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement