போஸ்டருக்கு போட்டோ ஷூட்லாம் கூட பண்ணிட்டோம் – ஆனால், இந்த காரணத்தால் ஜென்டில் மேன் படத்த வேணாம்னு சொல்லிட்டேன்.

0
7697
gentle
- Advertisement -

சினிமா திரை உலகில் பிரமாண்டம் என்றால் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது இயக்குனர் ஷங்கர் தான். மேலும், சினிமாவில் படங்களை இயக்குவதில் தனக்கென ஒரு பாதையையும், வித்தியாசமான கதைக் களத்தையும் கொண்டவர். இவருடைய படங்கள் எல்லாம் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் ஷங்கர் படத்துக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்றும் சொல்லலாம். சங்கர் அவர்கள் சூர்யன் பட இயக்குனர் பவித்ரன் என்ற இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். இதற்கு பின்னர் தான் இவர் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இவர் 1993 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த “ஜென்டில்மேன்” என்ற படத்தை இயக்கினார்.

-விளம்பரம்-

பின் இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்தது. மேலும், இந்த படத்தை தெலுங்கு, ஹிந்தி என இரு மொழிகளில் ரீமேக் செய்து வெளியிட்டார்கள். மேலும், இவருடைய முதல் படமே மாபெரும் வெற்றி அடைந்தது. ஆனால், இந்த திரைப்படம் ஆரம்பத்தில் சரத்குமாரிடம் சென்றுள்ளது. ஆனால், அந்த படத்தில் நடிக்க சரத்குமார் மறுத்துள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற சரத்குமார் கூறியுள்ளார்.

- Advertisement -

அதாவது, சரத்குமார் நடிப்பில் வெளியான சூர்யன் படத்தில் நடித்த போதே அந்த படத்தில் ஷங்கர் உதவி இயக்குனராக பணியேற்றியுள்ளார். அப்போதே ஜென்டில் மேன் படத்தின் கதையை சரத்குமரிடம் சொல்லியுள்ளார். அந்த சமயத்தில் சூர்யன் படமும் ஜென்டில் மேன் படமும் ஒரே சமயத்தில் நடிப்பது போல அமைந்துவிட்டது. அதே போல ஜென்டில் மேன் படத்திற்காக மீசையை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

ஆனால், அப்போது சரத்குமார் சூர்யன் படத்தில் நடித்து வந்ததால் அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதே போல சங்கருக்கு முன், பவித்ரன் தனக்கு தெரியும் என்பதால் சூர்யன் படத்தறேக்கே கால் ஷீட் கொடுத்துள்ளார் சரத்குமார். ஜென்டில் மேன் படத்திற்கு போஸ்டர் வெளியிடுவதற்காக போட்டோ ஷூட்கள் எல்லாம் நடைபெற்ற நிலையில் தான் சரத்குமார், பவித்ரனுக்காக ஜென்டில் மேன் படத்தை நிராகரித்து உள்ளார். அதன் பின்னர் தான் அர்ஜுன் அந்த படத்தில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement