‘ராயன்’ படத்தில், நடிகர் தனுஷின் டைரக்ஷனில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் சரவணன் கூறி இருக்கும் தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ராயன் பட செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கோலிவுடில் மிக பிரபலமான முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ். தற்போது தனுஷ் ‘ராயன்’ படத்தை இயக்கி நடித்துள்ளார். இது இவரின் 50வது படம் ஆகும்.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் துஷாரா விஜயன், சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி, சரவணன் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் ராயன் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. வசூல் ரீதியாகவும் இப்படம் சாதனை படைத்து வருகிறது.
தனுஷ் குறித்து சரவணன்:
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சரவணன் தனுஷின் டைரக்ஷனில் நடித்த அனுபவம் குறித்து கூறியுள்ளார். அதில், நடிகர் தனுஷ் கிட்ட நம்ம பிரண்ட்லியாக பேசலாம். ஆனா, டைரக்டர் தனுஷ் கிட்ட நம்ம பிரண்ட்லியா பேசவே முடியாது. அவரு டைரக்ஷன்ல பேய் மாதிரி வேலை செய்கிறார். அவரைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. ராயன் படத்தில் என்னுடைய முதல் சீன் நான் நடித்தேன். அப்போ அந்த சீனில் நான் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு சீக்குவன்ஸ். அப்போ தனுஷ் சார் வந்து நடிச்சு காமிச்சாரு.
என்னை மாதிரியே நடித்துக் காட்டினார்:
எனக்கு வந்து நடிச்சு காமிச்சா செட்டாகாது. என் காதில் சொல்லிட்டா போதும், அதை என் மனதில் ஏற்றிக்கொண்டு நான் நடித்து விடுவேன். அந்த கேரக்டரை நான் நன்றாக பண்ணுவேன் அதுவே எனக்கு போதுமானது. ஆனா, சூட்டிங்கில் செல்வராகவன் சார், எஸ்.ஜே.சூர்யா சார், வீடு ஃபுல்லா ஆர்டிஸ்ட் எல்லாரும் இருக்காங்க. எல்லாருக்கும் முன்னாடியே தனுஷ் என்னை மாதிரியே நடந்து வந்து, ‘என்ன ராயா’ என்று நான் பேசும் டயலாக்கை மனப்பாடமாக நடித்துக் காட்டினார்.
நான் பயந்துட்டேன்:
அதைப் பார்த்த உடனே எனக்கு பக்குனு ஆயிடுச்சு. இவரை மாதிரி நம்மால் செய்ய முடியுமா என்று எனக்கு தோணுச்சு. அப்புறம் அந்த சீனில் போய் நடிக்கும் போது, என்னால் ஒழுங்காக நடிக்க முடியவில்லை. ஏன் என்றால் அவர் நடித்துக் காட்டிய தாக்கம் என் மனதில் ஒரு பயத்தை உண்டாக்கி விட்டது என்று தன் அனுபவத்தை நடிகர் சரவணன் பகிர்ந்தார். மேலும். நடிகர் தனுஷ் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர், திரைப்பட பாடல் ஆசிரியர் என்ன பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார்.
தனுஷின் அடுத்த படங்கள்:
சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளிவந்த எல்லா படங்களும் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அடுத்து இவர் ‘குபேரா’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நாகார்ஜுனா மற்றும் ரஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார்கள். சேகர் கமுலா இயக்கும் இப்படத்திற்கு டிஎஸ்பி இசை அமைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு இயக்குனராக தனுஷ் இயக்கிய முதல் படம் ‘பா பாண்டி’. தற்போது இவர் இயக்கிய இரண்டாவது படம் தான் ‘ராயன்’. அடுத்து இவர் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.