சத்யராஜ் வாழ்ந்த பூர்வீக வீட்டை இடித்துவிட்டு கட்டப்பட்ட வளாகம். அவர் படித்த பள்ளி, தங்கையின் மருத்துவமனை. அறிய வீடியோ

0
163
sathyaraj
- Advertisement -

“கட்டப்பா” என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை தன்பக்கம் கட்டிப் போட்டவர் சத்யராஜ். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்தது. கடலோர கவிதைகள் என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் நடிகராக அறிமுகமாகி இருந்தார். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் சத்யராஜ். இவர் இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.

-விளம்பரம்-

இவர் ஆரம்பத்தில் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்தார். தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதிலும் பிரபாஸின் பாகுபலி படத்தின் மூலம் இவர் மீண்டும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்து இருந்த வீட்ல விசேஷம் என்ற படத்தில் சத்யராஜ் நடித்திருந்தார்.

- Advertisement -

வீட்ல விசேஷம் படம்:

பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பதாய் ஹோ’ என்ற படத்தின் ரீமேக் தான் வீட்ல விசேஷம். இந்த படம் ஹிந்தியில் 200 கோடி வரை வசூலித்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் இதை தமிழில் வீட்ல விசேஷம் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி, நடித்து இருக்கிறார். இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்து இருக்கிறார்.

சத்யராஜ் தங்கை நந்தினி

சத்யராஜ் நடிக்கும் படங்கள்:

மேலும், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் மற்றும் ஊர்வசி நடித்து இருக்கின்றனர். மேலும், இந்த படத்தில் சத்யராஜின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது இவர் பல படங்களில் பிசியாக கமிட்டாகி நடித்து வருகிறார். அதில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பிரின்ஸ் திரைப்படமும் ஒன்று. இந்த படம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ளது.

-விளம்பரம்-

சத்யராஜின் பூர்வீக வீடு:

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் மரியா, சத்யராஜ் உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தை அனுதீப் இயக்கி வருகிறார். இந்த நிலையில் சத்யராஜின் பூர்வீக வீடு குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சத்யராஜ் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டம் ராம்நகர் என்ற ஊரில் பிறந்தவர். அங்கு அவருக்கு சொந்தமான வீடும் இருந்தது. ஆனால், அந்த வீட்டை சத்யராஜ் விற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யராஜின் தங்கை:

அவர் வீடு இருந்த இடத்தில் தற்போது மிகப்பெரிய வணிக வளாகம் இருக்கிறது. அதோடு சத்யராஜ் வீட்டிற்கு அருகில் தான் அவர் படித்த பள்ளி இருக்கிறது. மேலும், சத்யராஜ் தான் படித்த பள்ளிக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து இருக்கிறார். அது மட்டுமில்லாமல் சத்யராஜின் சொந்த வீடு இருந்த தெருவிற்கு அருகில் அவருடைய தங்கையும் இருக்கிறார். அங்கு அவர் மகளிர் மகப்பேறு மருத்துவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement