கேப்டன் விஜயகாந்தை சிலர் இப்போது வேண்டுமானால் களாய்கலாம் ஆனால் அவரை ஒரு காலத்தில் இவர் செய்த நல்ல விஷயங்களையும்,நடிகர் சங்கத்திற்காக பாடுபட்டதயும் அவருடன் நடித்த சக நடிகர்களை கேட்டால் தான் தெரியும் அவரை என் கேப்டன் என்று அழைக்கிறார்கள் என்று.விஜயகாந்த் சினிமாவிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.அதனை சிறப்பிக்கும் வகையில் சமீபத்தில் அவருக்கு பாராட்டு விழா ஒன்று நடத்தப்பட்டது. இந்த விழாவில் விஜயகாந்த் தலைமுறை நடிகர்களும், இயக்குனர்களும் பங்குபெற்றனர்.

Advertisement

இந்த விழாவில் நடிகர் சரத் குமார் ,ஆனந்த ராஜ்,எஸ்.ஏ. சி,மன்சூர் அலிகான்,கலைப்புலி தாணு,நாசர்,மனோபாலாபோன்ற பல்வேறு நடிகர்கள் கலந்து கொண்டு விஜயகாந்துடன் தங்களுக்குள் நடந்த ஸ்வரசியமான சம்பவங்களை பகிர்ந்தனர்.மேலும் விஜயகாந்துடன் பல்வேறு படங்களில் இணைந்து நடித்த சத்யராஜ் விஜயகாந்த் நிஜ வாழ்வில் எப்படி பட்ட ஒரு ஹீரோ என்று ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

இதுபற்றி மேடையில் பேசிய சத்யராஜ் நடிகர் சங்கம் மிக பெரிய கடன் சுமை இருந்த கால கட்டத்தில்.கலை நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் வரும் பணத்தை வைத்து கடனை அடைக்க முடிவு செய்திருந்தார் அப்போதைய நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த். இதனால் அனைத்து நடிகர் வீட்டுக்கும் நேரில் சென்று சந்தித்து பேசி வந்தார் ஒரு நாள் ஆச்சி மனோரமாவின் வீட்டில் அவரை சந்தித்து வெளியில் வந்த போது யாரோ ஒரு பெண்ணிடம் ஒரு நபர் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை ஆறுத்துக்கொண்டு ஓடியுள்ளார். அப்போது அந்த சம்பத்தை பார்த்த விஜயகாந்த் உடனே வண்டியில் இருந்து இறங்கி ஓடிச்சென்று அந்த திருடனை துரத்தி பிடித்தார் விஜயகாந்த். அந்த அளவிற்கு விஜயகாந்த் ஒரு ரியல் ஹீரோ என்று பாரட்டியுள்ளார் சத்யராஜ்.

Advertisement
Advertisement