உங்கள் அன்பை பகிர்ந்துகொள்ள எனக்கு பல ஆண்டுகள் கிடைத்திருக்கனும் – சேதுராமன் மனைவியின் உருக்கமான பதிவு

0
129
- Advertisement -

தங்கள் திருமண நாளில் நடிகர் சேதுராமனின் மனைவி போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சேதுராமன். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் மருத்துவரும் ஆவார். இவர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் ஆவர். அதனால் தான் இவர் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பின்னர் இவர் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார். மேலும், டாக்டர் சேதுராமன் அண்ணா பல்கலைக்கழகத்தில் சரும நிபுணர் எனப்படும் dermatology என்ற துறையில் மருத்துவ படிப்பை முடித்து இருந்தார். கடந்த 2016ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு தோல் நோய் மருத்துவமனை ஒன்றை திறந்தார்.

- Advertisement -

சேதுராமன் குறித்த தகவல்:

இதில் சந்தானம், பாபிசிம்ஹா, நிதின் சத்யா, வெங்கட்பிரபு என்று பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இதனைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி அண்ணா நகரில் தனது இரண்டாவது மருத்துவமனையையும் திறந்தார் சேதுராமன். மருத்துவர் மற்றும் நடிகர் என்று இரண்டு துறையில் இருந்து வந்த டாக்டர் சேதுராமன் கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி உமா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மாரடைப்பால் மறைந்த சேதுராமன் :

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு சேதுராமன் மாரடைப்பால் காலமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்து விட்டார் என்ற ஒரு வதந்தியும் பரவியது. ஆனால், அவர் மாரடைப்பால் தான் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்து இருந்தனர். சேதுராமன் இறந்த போது அவரது மனைவி உமா கர்ப்பமாக இருந்தார். சேதுராமன் இறந்த 5 மாதத்தில் உமாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. சேதுராமன் இறப்பிற்கு பின் தன் இரண்டு பிள்ளைகளை கவனித்து வருகிறார் உமா.

-விளம்பரம்-

உமா சேதுராமன் பதிவு:

இந்த நிலையில் தங்களின் 9ஆம் ஆண்டு திருமண நாளில் சேதுராமனின் மனைவி உமா சேதுராமன் அவர்கள் உருக்கமான பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி இருவரும் சந்தித்தபோது இந்த பயணம் தொடங்கியது. இந்த உறவிற்கு நீங்கள் முடிச்சு போட்டு இன்றுடன் ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. எல்லாருடைய திருமணங்களும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை. ஆனால், எங்களுடைய திருமணம் அப்படியானது தான் என்று நான் நம்புகிறேன். சேதுராமன் மென்மையானவர், தனித்துவமான ஆளுமை கொண்டவர்.

சேதுராமன் பற்றி சொன்னது:

உங்கள் அண்மை பகிர்ந்து கொள்ள எனக்கு இன்னும் பல ஆண்டுகள் கிடைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் என்னை கவனித்துக் கொள்ள இரண்டு அழகான குழந்தைகளையும் மருத்துவமனையும் விட்டு சென்றிருக்கிறீர்கள். நாம் ஒன்றாக இருந்த அந்த அழகான நான்கு ஆண்டுகளை நான் எப்போதும் போற்றுவேன். எங்களுக்குள் சின்ன சின்ன சண்டைகள் கூட நடந்து இருக்கிறது. ஆனாலும் அவை எங்களை ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ள வைத்திருக்கிறது. உங்களிடம் எனக்கு பிடித்த விஷயமே எல்லோரையும் சுயமரியாதையாக நடத்துவது தான். அந்த குணத்திற்காக தான் இன்னும் உங்களை நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் வாழ்க்கை பயணத்தில் ஒரு அங்கமாக நான் இருந்ததில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஒன்பதாவது திருமண நாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Advertisement