விவசாயிக்கு மட்டுமல்ல அவரது பிள்ளைக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவி..!குவியும் பாராட்டு..!

0
781
- Advertisement -

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் வேளான் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வாரிசாக இயற்கை விவசாய பண்ணையை உருவாக்கி யானைக்கவுனி, கருங்குருனை உள்ளிட்ட150க்கும் மேற்பட்ட பண்டைகால பாரம்பரிய நெல் வகைகளை கண்டறிந்து அதனை விளைவித்து வந்தவர் நெல் ஜெயராமன்.

-விளம்பரம்-

தமிழகத்தில் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் ஆதரவு கொடுத்து வந்த இவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.சமீபத்தில் நெல் ஜெயராமனை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இவரது முழு மருத்துவ செலவையும் நடிகர் சிவகார்த்திகேயன் தான் பார்த்துக்கொள்கிறார். சமீத்தில் நெல் ஜெயராமன் தனக்கு உதவி செய்த சிவகார்த்திகேயனை நேரில் சந்திக்க ஆசைபடுவதாக கத்துக்குட்டி பட இயக்குனரிடம் கூறியுள்ளார். இதையடுத்து நடிகர் சிவகார்திகேயனே, நெல் ஜெயராமனை மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்துள்ளார்.

Shivakarthikeyan

-விளம்பரம்-

நெல் ஜெயராமனுக்கு இதுநாள் வரை மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்து உதவி செய்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன், நெல் ஜெயராமனின் மகனின் படிப்பு செலவையும் தானே பார்த்துக்கொள்வதாக கூறியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த செயலுக்கு பல்வேறு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறன்றது.

Advertisement