21 வயதில் விவகாரத்து பெற்ற மணிரத்னம் பட நடிகையுடன் சித்தார்த் காதல் ? வைரலாகும் Dating வீடியோ

0
1187
siddharth
- Advertisement -

மணிரத்னம் பட நடிகை ஒருவரை சித்தார்த் காதலித்து வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது இவர் பிசியாக படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் சமூக வளைத்தளத்திலும் ட்ரெண்டிங்கான நபர் தான். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சித்தார்த் அடிக்கடி பல சர்ச்சையான பதிவுகளை பதிவிட்டு வருகிறார். அதிலும் இவர் சமூக வலைத்தளங்களில் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல கருத்துகளை கூறி பலமுறை பல சிக்கலில் சிக்கி இருக்கிறார். இது குறித்து இவர் மீது பல விமர்சனங்கள் வந்து இருக்கிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : யாருமே இப்ப வாயை திறப்பதில்லை – பிரபல நட்சத்திரங்களை தாக்கி பிரகாஷ்ராஜ் போட்ட ட்வீட்.

அதிதி ராவ் ஹைதாரி திரைப்பயணம்:

இந்த நிலையில் மணிரத்னம் பட நடிகையை சித்தார்த் காதலித்து வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மணிரத்தினம். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவர் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி.

-விளம்பரம்-

அதிதி ராவ் ஹைதாரி நடிக்கும் படங்கள்:

முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்று பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
அதன் பின் இவர் செக்க சிவந்த வானம்,சைக்கோ ஆகிய படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஏராளமான இந்தி படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக நடன மாஸ்டர் பிருந்தா இயக்கத்தில் வெளியாகி இருந்த ஹே சினாமிகா படத்தில் அதிதி ராவ் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

சித்தார்த் – அதிதி ராவ் காதல்:

தற்போது இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் மும்பையில் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஆகிய இருவரும் இணைந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், இவர்கள் இருவரும் டேட்டிங் செய்வதாகவோ, காதலிப்பதாகவோ குறித்து இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால், அதே நேரத்தில் சித்தார்த்தின் பிறந்தநாளின் போது அதிதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

அதிதி முன்னாள் கணவர்

அதிதி விவாகரத்து:

இதைக்கொண்டு ரசிகர்கள் பலரும் இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் மகா சமுத்திரம் படப்பிடிப்பிலிருந்து காதலிக்க தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அதிதி ஏற்கனவே விவாகரத்து பெற்றவர். இவர் சினிமா துறைக்கு வரும் முன்னரே திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 21 வயது இருக்கும்போதே சத்ய தீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement