யாருமே இப்ப வாயை திறப்பதில்லை – பிரபல நட்சத்திரங்களை தாக்கி பிரகாஷ்ராஜ் போட்ட ட்வீட்.

0
473
prakash
- Advertisement -

முன்னணி நடிகர்கள் குறித்து பிரகாஷ்ராஜ் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக கொடி கட்டி பறப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். தமிழ் சினிமாவில் பாலச்சந்தரால் ‘டூயட்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பிரகாஷ் ராஜ். பின் தனது நடிப்பால் குறுகிய நாட்களிலேயே ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் மிரட்டி இருக்கிறார். அதிலும் பிரகாஷ் ராஜ் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது செல்லம் தான். அந்தளவிற்கு கில்லி படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமைக்காக தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : பாலிவுட் பிரபலங்களை பின்னுக்கு தள்ளிய விஜய், சமந்தா- வெளியான டாப் நடிகர்களின் பட்டியல்

பிரகாஷ் ராஜின் திரைப்பயணம்:

பெரும்பாலும் பிரகாஷ் ராஜ் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் தான் கலக்கி இருக்கிறார். அதிலும் சமீப காலமாக பிரகாஷ் ராஜ் அவர்கள் கதைகளை தேர்ந்தெடுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தற்போது இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அரசியலில் பிரகாஷ் ராஜ்:

அதுமட்டும் இல்லாமல் இவர் சமீப காலமாக அரசியலில் ஈடுபாடு காட்டி வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கர்நாடக மாநிலம் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேட்சையாக பிரகாஷ் ராஜ் போட்டியிட்டு இருந்தார். இந்தத் தேர்தலில் அவர் வெறும் 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். மேலும், பா.ஜ.க கட்சிக்கு எதிரானவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சமீப காலமாகவே இவர் சோசியல் மீடியாவில் அரசியல்வாதிகளை தாக்கியும், அரசியல் குறித்தும் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

சோசியல் மீடியா சர்ச்சை:

இதனால் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக பா.ஜ.கவுக்கு எதிரான கருத்துக்களை இவர் பதிவிட்டு இருக்கிறார். சமீபத்தில கூட புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் மேற்கூரையில் தேசியத்தை சின்னத்தை திறந்து வைத்தார் மோடி. அப்போது மோடி ஆட்சிக்கு வரும் முன் இருந்த ராமர், அனுமன் மற்றும் தேசிய சின்னத்தின் புகைப்படத்தையும், மோடி ஆட்சிக்கு வந்த பின்பு உள்ள ராமர், அனுமன் மற்றும் தேசியத்தின் புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார் பிரகாஷ் ராஜ். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலிவுட் திரையுலக பிரபலங்கள் மத்திய அரசுக்கு எதிராக டிவிட்டர் பக்கங்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள்.

பிரகாஷ்ராஜ் பதிவு :

தற்போது அனைவருமே அமைதியாக இருக்கின்றனர் என்று பாலிவுட் நடிகர்கள் பதிவிட்ட பதிவை பிரகாஷ்ராஜ் பதிவிட்டிருக்கிறார். குறிப்பாக, காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி கடந்த 2012ஆம் ஆண்டு பெட்ரோல் விலை ஏற்றத்தை கிண்டல் செய்த டுவிட்டையும், பிரபல நடிகர் அனுபம் கேர் இந்திய ரூபாய் மதிப்பு சரிவை விலாசியதையும், நடிகை ஷில்பா செட்டி இந்திய ரூபாயை வென்டிலேட்டர் இழுத்துக் கொண்டிருக்கிறது என்று கலாய்த்த டிவிட்டையும் பதிவு செய்து கலாய்த்துள்ளார். அதேபோல் அமிதாப்பச்சன், ஜூஹி சாவ்லா உள்ளிட்ட பிரபலங்கள் விலைவாசி உயர்வு குறித்து பதிவு செய்த டுவிட்டை பதிவு செய்து இவர்கள் எல்லாம் தற்போது ஏன் வாயை திறப்பதில்லை? என்பதை மறைமுகமாக கிண்டல் செய்யும் வகையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவு போட்டிருக்கிறார்.

Advertisement