சிம்பு-வெங்கட் பிரபு பட டைட்டில் இதோ.! அரசியல் சார்ந்த கதையா.? Poster பாருங்க புரியும்.!

0
443
Simbu

சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சிம்பு “அச்சம் என்பது மடமையடா ” என்ற படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது மணிரத்னம் இயக்கிவரும் “செக்க சிவந்த வானம் ” படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கபட்டது.

simbu

இதனடையில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் சிம்பு கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக தகவல்களும் ஏற்கனவே வெளியாகி இருந்தன. சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் தலைப்பை விரைவில் அறிவிப்பேன் என்று இயக்குனர் வெங்கட் பிரபு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த படத்திற்கு “அதிரடி ” என்று தலைப்பு வைத்துள்ளதாக நீண்ட நாட்களாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், தற்போது இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு “மாநாடு” என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படம் ஒரு அரசியில் சம்மந்தபட்ட படமாக இருக்கும் என்று இந்த போஸ்ட்டரை வைத்து பார்க்கும் போது ஊர்ஜிதமாகியுள்ளது.

இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக சில தகவல்களும் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்திற்கு அனிருத் அல்லது ஏ ஆர் ரகுமானை இசையமைபாலாளராக கமிட் செய்ய இயக்குனர் வெங்கட் பிரபு யோசித்து வருகின்றாராம். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.