எங்களுக்குள் சண்டையா..? அப்படி எதுவும் கிடையாது.! தனுஷுக்கு பிறந்தநாள் ட்வீட் செய்த சிவா

0
215
Dhanush-siva

விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.தமிழில் சினிமாவில் இவரை “3” படத்தின் மூலம் நடிகர் தனுஷ் அறிமுகம் செய்தார்.

dhanush

ஆனால். “3 ” படம் வெளியாவதற்கு முன்னபாகவே சிவகார்த்திகேயன் நடித்த ”மெரினா” படம் வெளியானது. இவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோ என்ற அந்தஸ்தை ஏற்படுத்தி தந்த பெருமையில் நடிகர் தனுஷிற்கு மிகப்பெரிய பங்குண்டு.

நடிகர் சிவகார்த்திகேயன் “மெரினா” படத்திற்கு பின்னர் “மனம் கொத்தி பறவை , கேடி பில்லா கில்லாடி ரங்கா” போன்ற படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு திருப்புமுனை படமாக அமைந்தது நடிகர் தனுஷ் தயாரித்த “எதிர் நீச்சல் “படம் தான்.

ஆனால், அந்த படத்திற்கு பின்னர் நடிகை சிவகார்த்திகேயன் , நடிகர் தனுஷை மறந்து விட்டார் என்றும், இவர்கள் இருவருக்கும் சில பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து விட்டனர் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் சமீபத்தில் தனது 35 வது பிறந்தநாளை கொண்டாடிய தனுஷிற்கு , நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் happy birthday sir ” என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இதனை கண்ட தனுஷ் ரசிகர் ஒருவர் ‘நன்றி சிவா.ஏத்தி விட்ட ஏணியை என்றைக்கும் மறக்காமல் இரு” என்று ட்வீட் செய்துள்ளார். ஆனால், இதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் எந்த ஒரு ரெஸ்பான்ஸும் செய்யவில்லை.