தன் அப்பா கையில் தன்னுடைய மகன் குகனை பார்த்து கண்கலங்கிய சிவகார்த்திகேயன் – வைரலாகும் நெகிழிச்சியான வீடியோ

0
578
sk
- Advertisement -

அப்பா கையில் தன்னுடைய மகன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து கண்கலங்கிய சிவகார்த்திகேயனின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எளிய பின்னணியிலிருந்து வந்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் ஹீரோயிசத்திற்கு மட்டுமில்லை அவரது நகைச்சுவை திறனுக்கும் என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது தமிழ் சினிமா உலகில் கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, பாடலாசிரியர், தொகுப்பாளர், சிங்கர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இவர் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குனர் ரவி தான் அயலான் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்:

மேலும், படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதோடு இந்த படம் ஏலியன் சம்பந்தப்பட்ட படம் என்றும் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் தெலுங்கு படம்:

தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. பின் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகும் ஒரு புதுப் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் டான் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

டான் படம் பற்றிய தகவல்:

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி ,எஸ்.ஜே சூர்யா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. மேலும், இந்த படம் மே 13ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது. இப்படி எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் சிவகார்த்தியேன் தலை கனம் இல்லாமல் இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் தன்னுடைய தந்தையை குறித்து எப்போது, எங்கு பேசினாலும் சிவகார்த்திகேயன் கண்களிலிருந்து கண்ணீர் வந்துவிடும். அந்த வகையில் சமீபத்தில் கூட ஒரு மேடையில் பேசும் போது தன்னுடைய தந்தையை நினைத்து சிவகார்த்திகேயன் அழுது இருந்தார்.

அப்பா குறித்து சிவகார்த்திகேயன் கண்கலங்கிய வீடியோ:

இந்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், என்னுடைய மகன் குகன் தாஸை என் அப்பா கையில் தூக்கி கொஞ்சுவது பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் ரசிகர் ஒருவர் மறைந்த என் அப்பா மற்றும் குடும்பத்தை வரைந்து அவரின் கையில் என்னுடைய மகன் இருப்பது போல வரைந்து கொடுத்து இருந்தார்கள். இதை பார்த்து என்னால் பேச முடியவில்லை. அந்த ரசிகர்கருக்கு ரொம்ப நன்றி. நடக்காத ஒன்றை ஓவியத்தின் மூலம் சாத்தியமாகி இருக்கிறார் என்று ஆனந்த கண்ணீரில் சந்தோஷம் அடைந்து இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

Advertisement