ராசு மதுரவன் குடும்பத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவி செய்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமாக அறியப்பட்ட இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் இராசு மதுரவன். இவர் ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் அண்ணன் தம்பி பாசம், குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் மூலம் இவர் குடும்ப ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் என்று சொல்லலாம்.
இந்த படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதை அடுத்து இவர் முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம் போன்ற படங்களை கொடுத்திருந்தார். அதற்குப் பின் இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் தன்னுடைய 49 வயதிலேயே இறந்துவிட்டார். காரணம், இவருக்கு புகையிலை போடும் பழக்கம் இருந்ததால் இவருக்கு தொண்டை புற்றுநோய் ஏற்பட்டிருந்தது. இவருடைய இறப்பு பலருக்கு தெரியாது என்று சொல்லலாம். மேலும், இவர் இறந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்து இருந்தது. பின் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் ராசு மதுரவனின் மனைவி பவானி, என்னுடைய கணவர் உயிரோடு இருந்திருந்தால் என் மகள்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காது.
ராசு மதுரவன் குறித்து சொன்னது:
தினம் தினம் எங்களுடைய வாழ்க்கை போராட்டத்தில் தான் சென்று கொண்டிருக்கின்றது. நாங்கள் 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். ஒன்னுமே இல்லாமல் தான் எங்களுடைய வாழ்க்கையை தொடங்கினோம். என்னுடைய ரெண்டு பொண்ணுக்கும் நல்ல கல்வியை கொடுக்கணும் என்று அவர் நினைத்தார். நல்லாவும் படிக்க வைத்தார். நன்றாகத்தான் எங்களுடைய வாழ்க்கை சென்றிருந்தது. திடீரென்று அவருக்கு புற்றுநோய் வந்தது. ஆஸ்பிட்டல் எல்லாம் போய் அவர் மீண்டும் வந்தார். ஆனால், எங்களுடைய நம்பிக்கை எல்லாம் பொய் ஆகிவிட்டது.
கணவர் இறப்பு:
என் கணவருக்கு இப்படி ஆகும் என்று நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை. நாங்கள் சேர்த்து வைத்திருந்தது எல்லாமே அவருடைய மருத்துவ செலவுக்கு சரியாகிவிட்டது. எங்க கிட்ட ஒண்ணுமே இல்லை. நான் என்னுடைய இரண்டு பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மதுரைக்கு வந்து விட்டேன். பெரிய பொண்ணு நேசிகா பிளஸ் டூ படிக்கிறாள், சின்ன பொண்ணு பத்தாவது படிக்கிறாள். என்னுடைய குடும்பத்தை நடத்த பொருளாதார ரீதியாக நாங்கள் ரொம்ப கஷ்டப்படுகிறோம். உதவி செய்ய எங்களுக்கு யாருமே இல்ல. ஒரு பிரைவேட் ஸ்கூலில் டீச்சராக வேலைக்கு போய் கொண்டிருக்கிறேன். இதுவரைக்கும் எங்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை.
ராசு மதுரவன் மனைவி பேட்டி:
ஹாஸ்பிடலில் இருக்கும்போது கூட சினிமாவிலிருந்து யாருமே வரவில்லை. அவருடைய இயக்கத்தில் எத்தனையோ பேர் நடிச்சிருக்காங்க ஆனா அவர்கள் எங்களை தொடர்பு கொண்டு எப்படி இருக்கீங்கன்னு கூட நலம் விசாரிக்கவில்லை என்று கண்கலங்கி கூறியிருந்தார். இப்படி இவர் பேட்டி அளித்ததற்கு பிறகு பலருமே உதவி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன், ராசுவின் இரண்டு மகள்களின் கல்வி கட்டணம் சுமார் 1 லட்சம் ரூபாயை செலுத்தி உதவி செய்திருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக ராசு மதுரவனின் மனைவி, இத்தனை நாட்கள் எங்கிருந்தோம்? என்ன பண்ணி இருந்தோம்? என்றும் யாரும் கண்டுகொள்ளவில்லை.
#Sivakarthikeyan 👏💗@Siva_Kartikeyan pic.twitter.com/MQ7WN0e9oB
— Prakash Mahadevan (@PrakashMahadev) July 22, 2024
சிவகார்த்திகேயன் செய்த உதவி:
மீடியா மூலம் தான் எங்களை பலருக்கும் தெரிந்தது. அதற்குப் பிறகு தான் எங்களுக்கு உதவி செய்கிறார்கள். சிவகார்த்திகேயன் சார் என்னுடைய இரண்டு மகள்களின் ஸ்கூல் பீஸ் 97,000 கட்டி விட்டார். அவருக்கும் என்னுடைய கணவருக்கும் எந்த சம்பந்தமே கிடையாது. ஆனால், நான் அளித்த பேட்டியை பார்த்து எங்களுடைய நிலைமையை புரிந்து கொண்டு உதவி செய்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. அதே மாதிரி திருச்சியை சேர்ந்த வரதராஜன் கண்ணன் என்பவர் எனக்கு 30,000 ரூபாவை அனுப்பி வைத்திருந்தார். இருவரும் எந்த சம்பந்தமும் இல்லாமல் எங்கள் குடும்பத்துக்காக உதவின சிவகார்த்திகேயன், திருச்சி வரதராஜன் சாருடைய குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன் என்று நிகழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.