அன்னையர் தினத்தன்று தன் அம்மா, அக்காவை வெளி உலகத்துக்கு காட்டிய சிவா புகைப்படம் உள்ளே !

0
1813
Actor sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன், தனது பயணத்தை ஒரு தொகுபகிளராகவும் ,காமடியனாகவும்  தனது கலை பயணத்தை தொடங்கியவர். தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் ஒரு இமாலய இடத்தை பிடித்துள்ளார். சின்னத்திரையில் இருந்தபோதே சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று கிடைத்த வாய்ப்பையேல்லாம் பயன்படித்தி இன்று சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக இருந்து வருகிறார்.

அன்னையர் தினமான இன்று அனைவருமே தனது அம்மா மீது ஒரு தனிப்பட்ட பாசத்தை காண்பித்து வருவார்கள். இத்தனை நாள் தனது அம்மாவுடன் புகைப்படம் எடுக்காதவர்கள் கூட இன்று ஒரு செல்பியாவது தனது அம்மாவுடன் எடுத்து, அதை தனது சமூக பக்கத்தில் சுயவிவர படமாக வைத்துவிடுவார்கள். அதிலும் குறிப்பாக சினிமாவில் உள்ள எண்ணற்ற நடிகர்களின் அம்மாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி கொண்டிருக்கின்றனர்.

இதுவரை சிவகார்த்திகேயன் பல விருது வழங்கும் விழாவில் தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்து வந்திருக்கிறார். மேலும் சிவகார்த்திகேயன் எந்த ஒரு மேடையில் விருதை வாங்கினாலும் அவரது மறைந்த தந்தையை பற்றி பேசாமலும் இருந்தது இல்லை.ஆனால், இதுவரை அவரது தாய் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் பெரும்பாலும் கலந்து கொண்டது கிடையாது தற்போது அன்னையர் தினமான இன்று தனது தாயின் புகைபடத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

sivakarthikeyan

அந்த பதிவில் நடிகர் சிவா, தனது அன்னையின் புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு அன்னையர் தின வாழ்த்துக்களை கூறியதுடன் முதன்முறையாக தனது அக்கா கௌரியின் புகைப்படத்தையும் அந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளார். அக்கா என்பவள் இரண்டாவது தாய்க்கு சமம் என்பதால் அன்னையர் தினமான இன்று அவரின் அக்கா புகைப்படத்தை பதிவிட்டுள்ளாரோ என்னவோ சிவகார்திகேயன்.