சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் கதை இதுவா..! நடிகை யார் தெரியுமா ? வெளிவந்த தகவல்

0
3126

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகவும் பாராட்டக்கூடியது. வேலைக்காரன் படத்திற்கு பின்னர் இவரக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது.தற்போது சிவகார்த்திகேயன் ஒரு படம் ஒன்றையும் தயாரித்துள்ளார்.நெருப்புட என்ற பாடல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.நடிகர், பாடகர் என்று பல திறமைகள் கொண்ட அருண் ராஜா காமராஜ் சிவகார்த்திகேயன் தயாரிக்கவுள்ள அந்த படத்தில் இயக்குனராகவும் அவதார மேடுத்துள்ளார்.

sivakarthikeyan

தமிழ் சினிமாவில் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் ஓரளவிற்கு வெற்றியை தேடி தரும். ஆனால் இதுவரை பெண்கள் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் மிகவும் குறைவே.அதனால் இந்த படத்தை பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுத்திருக்கிறார் அருண் ராஜா.படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நடுத்தர குடும்பப்பெண் தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கும் ஒரு பெண்ணாக நடித்துள்ளார்.

அவருக்கு தந்தையாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்ற மாதம் தொடங்கிய நிலையில் தற்போது முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதாக படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறியுள்ளார்.