என்கிட்ட பிடிக்காத விஷயம் இதுதான்..! இதை நான் மாத்திக்கணும் ! சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

0
419

உங்கக்கிட்ட உங்களுக்குப் பிடிக்காத, மாத்திக்கணும்னு நினைக்கிற குணம் எது? உங்க மனைவிகிட்ட எல்லா விஷயங்களும் ஷேர் பண்ணுவீங்களா?
குழந்தைத்தனமா சொல்லணும்னா நான் ரொம்ப நகம் கடிப்பேன். அதை மாத்திக்கணும். ரொம்ப முக்கியமா சொல்லணும்னா, நான் நிறைய யோசிச்சுகிட்டே இருப்பேன். அதை மாத்திக்கணும்” என்றதும், “அப்படி என்ன யோசிப்பீங்க” என்று கேட்க, சிரித்துக்கொண்டே,

sivakarthikeyan

உனக்கென்ன அவ்வளவு யோசிக்கிறதுக்கு இருக்கு, நீ என்ன பெரிய காரல் மார்க்ஸான்னு கேட்குறீங்களா… அப்படியில்ல… நான் ரிலாக்ஸா இருக்கும்போதுகூட ஏதாவது ஒன்னை யோசிச்சுட்டே இருப்பேன். அந்த மொமன்ட்டை என்ஜாய் பண்றதை விட்டுட்டு, ‘இது ஏன் இப்படி இருக்கு, அது ஏன் அப்படி இருக்கு’ன்னு நிறைய யோசனைகள் ஓடும். எதையுமே கொஞ்சம் தள்ளியிருந்துதான் என்ஜாய் பண்றேன்.

அதை மாத்திக்கணும்னு நினைக்கிறேன். எல்லா விஷயங்களையும் மனைவி ஆர்த்திக்கிட்ட ஷேர் பண்ணிருவேன். ஆனா ப்ரஷர் கொடுக்கிற சில விஷயங்களை மட்டும் சொல்ல மாட்டேன். ஏன்னா பிறகு அவங்களும் நிறைய யோசிக்க ஆரம்பிச்சுருவாங்க.