எதற்காக செல் போனை தட்டி விட்டேன்..!நடிகர் சிவகுமார் விளக்கம்..!

0
1445
sivakumar
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் ஒழுக்கமான நடிகர் என்ற பெயரை எடுத்தவர் நடிகர் சிவகுமார். எம் ஜி ஆர்,சிவாஜி காலகட்டம் தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமாவில் மிகவும் மதிக்ககூடிய நபராக கருதப்பட்டு வருபவர்.நடிகர் சிவகுமார் என்றாலே அவரது அமைதியான குணமும், அறிவுரையாக பேச்சுகளும் தான் நம் நினைவிற்கு வரும்.

-விளம்பரம்-

- Advertisement -

ஆனால், சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று சிவகுமார் ரசிகர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் நடிகர் சிவகுமார் தன்னிடம் செல் போனில் செல்பி எடுக்க வந்த இளைஞரின் செல் போனை ஆவேசமாக தட்டி விடும் காட்சிஅந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த வீடியோ பதிவு சமூக வலைதளத்தில் தீயாக பரவ நடிகர் சிவகுமார் மீது பல்வேறு நெட்டிசன்களும் தங்களது கண்டனத்தையும், வருத்தத்தையும் தெரிவித்தனர். இந்நிலையில் எதற்காக அந்த இளைஞரின் செல் போனை தட்டி விட்டேன் என்று நடிகர் சிவகுமார் விளக்கமளித்துள்ளார்.

Sivakumarfan

sivakumar

இதுகுறித்து பேசியுள்ள அவர், செல்ஃபி எடுப்பது என்பது நீங்கள் உங்கள் குடும்பத்துடன் சுற்றுல்லா செல்லும் போது எடுத்துக்கொள்ளும் ஒரு தனிப்பட்ட சமாச்சாரம். ஆனால், 200 நபர்கள் இருக்கும் ஒரு நிகழ்ச்சியில் நான் மண்டபத்திற்கு உள்ளே செல்லும் போது 20,30, நபர்கள் உங்களை சுற்றி நடக்க கூட அனுமதிக்காமல் செல்போனை காட்டி படம் எடுப்பது என்ன நியாயம். ஏன் அவர்கள் உங்களிடம் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்கமாட்டார்களா. பிரபலங்கள் என்றாலே நாம சொன்னபடியெல்லாம் கேட்க வேண்டும் என்பது என்ன நியாயம்.

நான் எத்தனையோ முறை விமான நிலையத்திலும், திருமண நிகழ்ச்சிகளிலும் பல பேருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளேன். நான் புத்தன் இல்லை நானும் மனிதன் தான் நான் என்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். அதே சமயம் என்னை தலைவனாக ஏற்று என்னை கொண்டாடவும் சொல்லவில்லை. ஒரு ஒருவரை துப்புறுத்தாமல் இருக்க வேண்டும் என்பது தான் எனது கருத்து என்று தெரிவித்துள்ளார்.

Advertisement