செல்பி எடுத்த இளைஞரின் செல்போனை உடைத்த சிவகுமார்..!வைரலாகும் வீடியோ..!

0
251
Sivakumar

தமிழ் சினிமாவில் மிகவும் ஒழுக்கமான நடிகர் என்ற பெயரை எடுத்தவர் நடிகர் சிவகுமார். எம் ஜி ஆர்,சிவாஜி காலகட்டம் தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமாவில் மிகவும் மதிக்ககூடிய நபராக கருதப்பட்டு வருபவர்.நடிகர் சிவகுமார் என்றாலே அவரது அமைதியான குணமும், அறிவுரையாக பேச்சுகளும் தான் நம் நினைவிற்கு வரும்.

ஆனால், சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று சிவகுமார் ரசிகர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் நடிகர் சிவகுமார் தன்னிடம் செல் போனில் செல்பி எடுக்க வந்த இளைஞரின் செல் போனை ஆவேசமாக தட்டி விடும் காட்சிஅந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

சமீபத்தில் நடிகர் சிவகுமார் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அப்போது அவர் ரிப்பன் வெட்டி கடைய துறபதற்கு முன்பாக இளைஞர் ஒருவர் சிவகுமார் அருகில் செல்பி எடுக்க முயற்சி செய்கிறார். இதனை கண்ட நடிகர் சிவகுமார் ஆவேசத்துடன் அந்த இளைஞரின் செல் போனை தட்டி விடுகிறார்.பின்னர் செய்வதறியாது அந்த இளைஞர் நின்றுகொண்டிருக்க அருகில் இருந்தவர்களும் ஒன்றும் நடக்காதது போல இருந்து விடுகின்றனர்.