இந்தியாவில் கடந்த ஓராண்டிற்கு மேலாக கொரோனா வைரஸ்சால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதக்கப்பட்டும் இருக்கிறது. இதனால் பல்வேறு நபர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். மேலும், பல்வேறு சினிமா பிரபலங்களும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றார்கள். அதிலும் நடிகர் சோனு சோத் தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறார். மஹாராஷ்டிரா மற்றும் தானேவில் இருந்து புறப்பட 10 சொகுசு பேருந்துகளை இலவசமாக ஏற்பாடு செய்திருந்தார். அவரது 6 மாடி கொண்ட ஹோட்டலை, ‘கொரோனா’ வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஓய்வு எடுக்க பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார்.

விவசாயி ஒருவருக்கு டிராக்டர் ஒன்றை வாங்கி கொடுத்தார்.கோவிட்-19 தொற்றால் வீடு திரும்ப முடியாமல் ரஷ்யாவில் சிக்கியிருந்த 105 தமிழக மாணவர்கள் சென்னை திரும்ப உதவி செய்தார். இதற்கு எல்லாம் மேலாக கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்தி ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைக்கவும் தட்டமிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : 23 ஆண்டுகளுக்கு முன் ஹீரோயின் – தான் நடித்த முதல் சீரியலின் முதல் எபிசோட் வீடியோவை பகிர்ந்த அண்ணியார். எப்படி இருந்துள்ளார் பாருங்க.

Advertisement

இதுபோல பல்வேறு உதவிகளைத் தொடர்ந்து செய்து வரும் சோனுவுக்குப் பலரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட சோனு சூட்டிற்கு சிலை கூட வைத்து தங்களது நன்றிகளை தெரிவித்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் சோனு சூத், விஜய் பாடலில் குரூப் டான்சரில் ஒருவராக ஆடியுள்ள விஷயம் தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் சோனு சூட், விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘கள்ளழகர்’ படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சோனு சூட் ‘தளபதி’ விஜய்யின் ‘நெஞ்சினிலே’, ‘நவரச நாயகன்’ கார்த்திக்கின் ‘சந்தித்த வேளை’, ‘டாப் ஸ்டார்’ பிரஷாந்தின் ‘மஜ்னு, சாகசம்’, ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித்தின் ‘ராஜா’, நடிகை சிம்ரனின் ‘கோவில்பட்டி வீரலட்சுமி’, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘சந்திரமுகி’, ‘யங் சூப்பர் ஸ்டார்’ சிம்புவின் ‘ஒஸ்தி’, ‘கிங் ஆஃப் டான்ஸ்’ பிரபு தேவாவின் ‘தேவி’ என அடுத்தடுத்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.

Advertisement
Advertisement