இது வரை நீங்கள் பார்க்காத சூரி மற்றும் விஷால்..! வெளியான அறிய புகைப்படம்

0
761
Vishal
- Advertisement -

தமிழ் சினிமா நடிகர் சங்க செயலாளரும் பிரபல நடிகருமான விஷால் நேற்று(ஆகஸ்ட் 29) தனது 41 வது பிறந்தநாளை முன்னிட்டு தனது ரசிகர் மன்றத்தின் பெயரை `மக்கள் நல இயக்கம்’ என்று பெயர் மாற்றப்படுவதாக நடிகர் விஷால் அறிவித்தார். `அணி சேர்வோம், அன்பை விதைப்போம்’ என்ற வாசகத்துடன் கூடிய கொடியையும் இந்தக் கூட்டத்தில் விஷால் அறிமுகப்படுத்தினார்.

-விளம்பரம்-

- Advertisement -

விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களுது வாழ்த்துக்களை சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் காமெடி நடிகர் சூரி மிகவும் வித்யாசமான ஒரு புகைப்படத்தை பதிவிட்டு நடிகர் விஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

காமெடி நடிகர் சூரி, நடிகர் விஷாலுடன் சேர்ந்து “பூஜை,மருது , கத்தி சண்டை’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் விஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்திருந்த நடிகர் சூரி, தானும், விஷாலும் ஒன்றாக இருக்கும் ஒரு பழைய புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டு “அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே” என்று குறப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-

இந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்களும் விஷால் மற்றும் சூரி-யா இது என்று மிகவும் வாயடைத்து போய்விட்டனர். தற்போது இந்த புகைப்படத்திற்கு பல்வேறு லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. ஆனால், ஒரு சிலரே இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று சில ட்வீட்களையும் பதிவிட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் உங்களது கருத்துகளையும் கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் கூறுங்கள்.

Advertisement