கேக் செலவு – 1500, பெட்ரோல் செலவு – 500, டெக்கரேஷன் செல்வு – 2000 – சூரி பிறந்தநாளுக்கு அவரது பிள்ளைகள் செய்த சேட்டை.

0
2790
soori
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூரி. இவர் 1999 ஆம் ஆண்டு வெளி வந்த நினைவிருக்கும் வரை என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், இவர் 2009 ஆம் ஆண்டு வெளி வந்த வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் வரும் ஒரு பரோட்டா காமெடி காட்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானர். அதனால் இவரை இன்று வரை பரோட்டா சூரி என்று தான் அழைக்கிறார்கள்.

-விளம்பரம்-

தற்போது வடிவேலு, சந்தானத்திற்கு பிறகு தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தற்போது நடிகர் சூரி அவர்கள் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் சூரி இன்று (ஆகஸ்ட் 27) தனது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து நடிகர் சூரிக்கு பல்வேறு பிரபலங்களும் தங்களது வாழ்த்தினை தெரிவித்து இருந்தனர்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் சூரியின் பிறந்தநாளை அவரது மகன் மற்றும் மகள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். கேக் செலவு – 1500, பெட்ரோல் செலவு – 500, டெக்கரேஷன் செல்வு – 2000 மொத்தம் 4000 மொத்த காச எடுத்து வெச்சிட்டு கேக்க வெட்டு என்று அந்த கேக்கின் மேல் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளனர்.

தனது பிள்ளைகளின் இந்த குறும்பு தனமான செயலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூரி, 400ருவா கேக்க கொடுத்துபுட்டு 4000ருவாய புடிங்கிருச்சுங்க நாபெத்த பிள்ளைங்க. இருந்தாலும் இந்த கேக்கிற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம். தேங்க்யூ கட்டிபெத்தார்களா என்று வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement