நடிகை மீனா வீட்டை வாங்கிய சூரி. எத்தனை கோடி கொடுத்து வாங்கியுள்ளார் தெரியுமா ?

0
110668
soori-meena
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் 90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. தற்போது நடிகை மீனாவின் வீட்டை காமெடி நடிகர் சூரி அவர்கள் வாங்கி உள்ளார். மேலும், இது குறித்து பல கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன. தமிழ் சினிமா உலகில் 1982 ஆம் ஆண்டு வெளியான ‘நெஞ்சங்கள்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. இதை தொடர்ந்து இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். உதாரணத்திற்கு ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் ‘ரஜினி uncle’ என்ற டயலாக் மூலம் மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். அதுமட்டுமில்லாமல் தற்போது ‘ரஜினி uncle’ என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது மீனா தான். அந்த அளவிற்கு அவர் நடித்திருந்தார்.

-விளம்பரம்-
Image result for Actor Soori"

பிறகு 1991 ஆம் ஆண்டு வெளிவந்த ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு நடிகை மீனா கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். மேலும்,இவர் தமிழில் பல சூப்பர் டூப்பர் படங்களை கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆவதற்கு முன்பே இவர் ஏராளமான தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். மேலும்,ரஜினி uncle என்று சொல்லி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா அவர்கள் ரஜினிகாந்துக்கு ஜோடியாக முத்து, எஜமான் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து இவர் கமல், விஜயகாந்த், கார்த்திக், சத்யராஜ், சரத்குமார் என்று அனைத்து ஹீரோக்களுடனும் நடித்துள்ளார்.

- Advertisement -

இதையும் பாருங்க : வாயில் சிகரெட்டுடன் நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா ? இவரா இப்படி ? வைரலாகும் புகைப்படம்.

மேலும்,நடிகை மீனா அவர்கள் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் அனைத்து மொழிகளிலும் உள்ள டாப் ஹீரோக்களுடன்கூட நடித்து உள்ளார். மேலும், நடிகை மீனா 90 கால கட்டங்களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். பின் நடிகை மீனா அவர்கள் திருமணத்திற்க்கு பிறகு நடிப்பதில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுத்துக் கொண்டார். இதனைத்தொடர்ந்து நடிகை மீனாவுக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. மேலும், குழந்தை பிறந்த பிறகு மீனா அவர்கள் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

-விளம்பரம்-

தமிழில் மீனா குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ஆனால், மலையாள மொழியில் மட்டும் தற்போது கூட கதாநாயகியாக நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் நடிகை மீனாவின் குழந்தை விஜய் அவர்களின் ‘தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். இப்படி நடிகை மீனா அவர்கள் சினிமாவில் பல்வேறு சாதனைகளை புரிந்து உள்ளார். அதோடு நடிகை மீனா சென்னையில் முதல் முறையாக வீடு ஒன்று கட்டியிருந்தார். மேலும், இந்த வீட்டை நடிகர் சூரிக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. சென்னை சாலிகிராமம் அருகே இருக்கும் மீனாவின் வீட்டை நடிகர் சூரி சுமார் 6.5 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. சூரியை தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அதுவும் பரோட்டா சூரி என்றால் சின்ன குழந்தை கூட சொல்லிவிடும்.

Image result for meena"

அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகிறார். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தான் திரை உலகில் அறிமுகமானார். மேலும், அடுத்தடுத்து பல படங்களில் சூரி பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பு தவிர தற்போது ஹோட்டல் பிசினஸ் செய்து வருகிறார் என்ற தகவல் வந்துள்ளது. அந்தவகையில் அய்யன் மற்றும் அம்மன் என்ற சைவ மற்றும் அசைவ ஹோட்டல்களை மதுரையில் சமீபத்தில் தான் ஆரம்பித்தார். இந்த நிலையில் நடிகர் சூரி அவர்கள் மீனாவின் வீடு விலைக்கு வருவதை அறிந்து அந்த வீட்டை அவர் வாங்க இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், பல பேர் இந்த வீட்டை வாங்க முயற்சி செய்தார்கள்.

ஆனால், அவர்கள் எல்லாரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு நடிகர் சூரி இந்த வீட்டை வாங்கினார். நடிகர் சூரியின் அலுவலகத்திற்கு அருகில் தான் நடிகை மீனாவின் வீடு இருக்கிறது. மேலும், முதல் எல்லாம் சூரியின் அலுவலகத்திற்கு முகவரி கேட்டால் நடிகை மீனாவின் வீட்டிற்கு பக்கத்தில் தான் உள்ளது என்றும் சொல்வார்கள். ஆனால், இப்போது சூரியின் அலுவலகத்திற்கு பக்கத்தில் தான் மீனா வீடு உள்ளது என்றும் சொல்லும் அளவிற்கு வந்து விட்டது. இப்படி ஒரு சுவாரசியமான செய்திகளை கேட்டு ஒட்டு மொத்த தமிழ் சினிமாவே வியப்பில் உள்ளது என்றும் சொல்லலாம்.

Advertisement