வாயில் சிகரெட்டுடன் நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா ? இவரா இப்படி ? வைரலாகும் புகைப்படம்.

0
34496
nenjam-marapathillai-saranya
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறது. அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தவறுகள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த நெஞ்சம் மறப்பதில்லை தொடர் 358 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடியது .இந்த தொடரில் சரண்யா என்ற தனது சொந்தப் பெயரிலேயே நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை சரண்யா தொரடி சுந்தர். சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்த இவர், தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சிகளில் பணியாற்றி வந்தார்.

-விளம்பரம்-
saranya

ஆரம்பத்தில் கலைஞர் செய்திகளுக்கு செய்தி நிருபராக இருந்து வந்த இவர். அதன் பின்னர் ராஜ் தொலைக்காட்சியில் பணியாற்றினார். ஆனால் அந்த தொலைக்காட்சியிலும் இரண்டு மாதங்கள் மட்டுமே பணியாற்றினார் .பின்னர் ஜீ தமிழ் புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சிகளில் செய்தி நிருபராக பணியாற்றினார். மேலும், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சினிமா பிரபலங்களை நேர்காணல் செய்யும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் சரண்யா. புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த போதே இவருக்கு ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

இதையும் பாருங்க : பிரபல இயக்குனரின் பிறந்தநாள். கேக் ஊட்டி கொண்டாடிய பிரியா பவானி ஷங்கர். வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

பின்னர் மீண்டும் தொலைக்காட்சி பக்கம் திரும்பிய சரண்யா நியூஸ்18 தொலைக்காட்சியில் தலைமை செய்தி நிருபராக பணியாற்றினார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்து இருந்தார். இந்த நிலையில் இவர் நடித்த ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி படத்தில் இருந்து சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் வாயில் தம்முடன் இருக்கும் சரண்யாவை கண்டு ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். மேலும், சீரியல்களில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் சரண்யா இப்படி என்று வியந்து போய் இருக்கிறார்கள். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
saranya

ஆனால், இது சரண்யா இல்லை எனவும் இந்த படத்தில் அக்ஷரா என்பவரின் புகைப்படம் தான் இது என்றும் கூறப்படுகிறது. நெஞ்சம் மறப்பதில்லை சீரியலுக்கு பின்னர் நடிகை சரண்யா சன் தொலைக்காட்சியில் சமீபத்தில் துவங்கபட்ட ரன் என்ற தொடரில் நடித்து வந்தார். ஆனால், சமீபத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை சாயா சிங் கமிட் ஆகியுள்ளார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆயுத எழுத்து’ சீரியலில் நடித்து வருகிறார் நடிகை சரண்யா.

Advertisement